பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங்களில் தில்லை

107


எங்காளும் அன்னம் பாலிக்கும் ஆற்றலுடையது. தில்லையில் உள்ள தெருவெல்லாம் திருமடங்கள். நிலவு கின்றன. கூத்தப்பெருமானைக் கும்பிட வரும் அடியார் குழாத்திற்கெல்லாம் சோறுட்டும் திருமடங்கள் அவை. அத்தகைய சோறு மணக்கும் மடங்களைக் கண்ட திருநாவுக்கரசர், ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்று வாயார வாழ்த்தினர். திருக் கோவிலுட் புகுந்து கூத்தப்பெருமானே வழிபட்டார். ‘அத்தா! உன் ஆடல் காண்பான் இங்கு வந்தேன்: பத்தனாய் நின்று பாடும் பாவன்மை எளியேனுக்கு இல்லையாயினும் என்னை இகழ்ந்து ஒதுக்கிவிடாதே!’ என்று உளங்கரைந்துருகி வேண்டினர். அவருக்குக் கூத்தப்பெருமானது புன்முறுவல் பூத்த திருமுகம், ‘அன்பனே! வருக! என்று வந்தாய்? எப்போது இங்கு வந்தாய்?’ என்று அருளோடு வினவுவது போன்று திருக்குறிப்புக் காட்டியது. உடனே அக் கருத்தை யமைத்து அழகான பாடல் ஒன்று பாடினார். அப்பெருமானுடைய குனித்த புருவத்தையும், கொவ்வைக்கனி போன்ற செவ்வாயினையும், அதில் மெல்லென அரும்பும் புன்சிரிப்பையும், பனித்த சடை யினையும், பவளம் போன்ற மேனியையும், அம் மேனியிற் பூசிய பாலனைய வெண்ணிற்றையும், இன்பந்தரும் எடுத்த பாதத்தையும் காணும் பேறு பெற்றால் இம் மனிதப்பிறவியை எத்தனமுறையானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.

‘குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயில் குமிண்சிரிப்பும்
பணித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணிறும்