பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த தில்லை

115

லேயே நமச்சிவாயப் புலவர், படிக்காசுப் புலவரெனப் பாராட்டும் பேறு பெற்றார்.

மகாவித்துவானும் நாவலரும்

சென்ற நூற்றாண்டில் விளங்கிய பெரும் புலவராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தில்லை யமக அந்தாதி பாடிச் சிறப்பித்தார். இவர் காலத்தில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் தில்க்லமாககளில் தங்கித் தம் பேச்சாலும் எழுத்தாலும் சைவத்தையும் தெய்வத் தமிழையும் வளர்த்தார். அவருடைய தமிழ் நாவன்மையைக் கண்டு வியந்த துறைசையாதீனத் தலைவராயிருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் ‘நாவலர்’ என்ற பட்டமளித்துப் பாராட்டினர். இவர் தில்லை மாநகரில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்னும் தமிழ்ப்பள்ளி யொன்றை நிறுவித் தமிழையும் சமயத்தையும் பரப்பினர். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்ற நூல்களுக்கு எளிய கடையில் சிறந்த உரைநடை வரைந்து ‘வசனநடை கண்ட வல்லாளர்’ என்று தமிழுலகம் போற்றும் பெருமை யுற்றார். இவர் சிதம்பர மான்மியம் என்னும் நூலையும் ஆக்கினார்.

தில்லையில் இராமலிங்கர்

இதே காலத்தில் வாழ்ந்த அருட்பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் பல்லாண்டுகள் தில்லை மாநகரிலேயே தங்கித் தெய்வத்தமிழை வளர்த்தனர். இவரும் சிறந்த பாவன்மையும் நாவன்மையும் படைத்தவர். ஒருகால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக காவலரிடம், “சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை துறவு பூண்டதனாலன்றோ