பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழ் வளர்த்த நகரங்கள்

தங்கட்கு நாவலர் என்ற பட்டமும் எனக்கு மகா வித்துவான் பட்டமும் கிட்டின; இந்நாளில் இவ்விரு பட்டத்திற்கும் உரியவர் இராமலிங்கம் பிள்ளேயே” என்று கூறினார். இத்தகைய இராமலிங்க அடிகள் தில்லைக்கூத்தனைப் பல்லாயிரம் அருட்பாக்களால் பாடிப் பரவினர். அவையெல்லாம் திருவாசகத்தைப் போல், கற்பவர் கேட்பவர் உள்ளத்தைக் கரைந்துருகச் செய்யும் உயர்ந்த மாண்புடையன.

தில்லையில் மீனாட்சி கல்லூரி

இந்த நூற்றாண்டில் செட்டி நாட்டரசர் அண்ணாமலைச்செட்டியார் தில்லைமாநகரில் மீனாட்சி தமிழ்க் கல்லூரியை நிறுவினர். இக்கல்லூரியின் தலைவராக டாக்டர் உ. வே. சாமிநாதையர் நியமிக்கப் பெற்றார். இவருக்கு உதவியாகப் பல தமிழ்ப் புலவ்ர்களும் நியமிக்கப்பெற்றனர். 1920ஆம் ஆண்டில் மீனாட்சி கலைக்கல்லுரரியாகத் தோன்றிய கல்விக்கூடம். படிப்படியாக வளர்ச்சியுற்று 1938-ல் அது அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருவாயிற்று. தமிழ், ஆங்கிலம், வடமொழி, விஞ்ஞானம், இசை, தத்துவம் முதலிய பல துறைக்கலைகளும் கற்பிக்கும் கழகமாக இருந்தாலும் சிறப்பாகத் தமிழர் கலைகளையும் பண்பாட்டையும் காத்து வளர்க்கும் தமிழ்ப்பல்கலைக்கழகமாகவே தழைத்தோங்கி வருகிறது.

தில்லையில் தமிழ்ப்பல்கலைக்கழகம்

தில்லைமாநகரின் கிழக்கே அமைந்துள்ள சிறந்த பதிகளாகிய கொற்றவன்குடிக்கும் திருவேட்கனத்திற்கும் நடுவே அண்ணாமலைப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கொற்றவன் குடி, சைவசித்தாந்த சாத்