பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன்னேரிலாத தமிழ்

9

புலவர்களும் பாடிக் களிக்கின்றனர். தேசீயக் கவிஞராகிய பாரதியார் பன்மொழியறிந்த பைந்தமிழ்ப் புலவர். அவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று வியந்தோதினர். இளங்குழந்தைக்குத் தமிழின் சிறப்பைக் கூற விரும்பிய அப் புலவர், சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதனைத்-தொழுது படித்திடுக ” என்று அன்போடு எடுத்துரைத்தார்.

பாரதிதாசனாரும் பைந்தமிழும்

தமிழின் இனிமையைப் பகரவந்த பாரதிதாசனார், “முதிர்ந்த பலாச்சுளையும் முற்றிய கரும்பின் சாறும் பனிமலர்த்தேனும் பாகின்சுவையும் பசுவின் பாலும் இளநீரும் தமிழின் இனிமைக்கு ஒப்பாக மாட்டா” என்று உரைத்தார்.

"தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !”

என்று இன்பக் கூத்தாடுகின்றார்.

திருக்குறளும் தொல்காப்பியமும்

இத்தகைய தமிழ் ஆயுந்தொறும் ஆயுந்தொறும் அளவிலாத இன்பந்தரும் இயல்புடையது என்று போற்றினார் பொய்யாமொழிப் புலவர். ஆய்தொறும் இன்பூட்டும் அரிய நூல்கள் பல இம்மொழியில் தோன்றியுள்ளன. அவற்றுள் தலையாயது உலகப் பொதுமறையாகிய திருக்குறள் நூலாகும் ; தொன்மை வாய்ந்தது ஒல்காப் புகழ் படைத்த தொல்காப்பியம் என்னும் இலக்கணப் பெருநூலாகும். மொழிநலம் குன்றாது காத்துநிற்கும் மொய்ம்புடையது தொல்