பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய மதுரை

31

"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்.”

இந் நகரில் எப்பொழுதும் வேதியர் ஓதும் மறையொலி நிறைந்திருக்கும். அந்த மறையொலி கேட்டே மதுரை நகரத்து மக்கள் துயிலெழுவர். சோழன் தலைநகராகிய உறையூரிலும், சேரன் தலைநகராகிய வஞ்சியிலும் வாழும் மக்கள் கோழி கூவும் ஒலி கேட்டுத் துயிலெழுவது போன்று மதுரை மக்கள் துயிலெழுவதில்லை.

வையையாற்றில் நீராடிய மக்கள் ஒப்பனை செய்து கொள்ளுவதற்கென்று சில தனிமாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மாடங்களுள் சில புலிமுக வடிவில் விளங்கின. அப்புலி வடிவத்தைக் கண்டு, உண்மைப் புலியென்று கொண்டு, களிற்றைப் பாயுமென வெருண்டு, பிடிகள் சிதைந்து ஓடுவதுண்டு.

இந்நகரில் பூக்களை ஆராய்ந்து கொய்பவர் பலர் இருந்தனர். அவர்கள் மலர் கொய்தற்கெனத் தனிக் கோல் ஒன்று வைத்திருந்தனர். அவர்கள் கொய்த மலர்களை மாலையாகக் கட்டுதற் பொருட்டு ஓரிடத்தில் குவிப்பர். அவற்றைக் குவிப்பதற்காகத் தனியே பூமண்டபங்கள் இருந்தன.

மதுரைமாநகரின் மதிலையொட்டி வையை சென்றது. அதில் பெருகிவரும் வெள்ளத்தின் அலைகள், விண்ணுற நிவந்த மதிலின்மீது மோதும். அவ் அலையோசை கேட்டு நகரமக்கள் துயிலெழுவர். மதிலில் நீண்டதொரு சுரங்கவழி நிலவியது. அதன் உள்ளே சென்ற ஆற்றுநீரை, மதில் புறத்தே சொரியும் காட்சி,