பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ் வளர்த்த நகரங்கள்


இளங்கோவடிகள் காட்டும் மதுரை

காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத் திருமா மணியாய்த் தோன்றிய கண்ணகியின் கற்பு மாண்பைக் கவினுற விளக்கும் காவியம் சிலப்பதிகாரம். சேர நாட்டு வீரவேங்தர் வழித்தோன்றலாகிய இளங்கோ வடிகள் அவ் இனிய காவியத்தை ஆக்கியருளின்ர். அவர் தமது காவியத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று பெரும் பிரிவுகளை வகுத்துள்ளார். அவற்றுள் நடுவண் அமைந்த மதுரைக் காண்டம் கண்ணகி வாழ்வில் மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை விளக்குகிறது. அப்பகுதியில் மதுரையைப் பற்றிய செய்திகள் பல கூறப்படுகின்றன.

‘சூழ்வினைச் சிலம்பு காரணமாக, காட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யு’ளென உறுதிபூண்ட இளங்கோவடிகள் மதுரைமாககரை ஒருமுறையேனும் நேரில் கண்டறிந்தவராதல் வேண்டும். மதுரையிலேயே பல்லாண்டுவாழ்ந்து கூலவாணிகம் நடாத்திய சீத்தலைச் சாத்தனர் அவருக்குத் தண்டமிழாசானதலின் அவர் வாயிலாக மதுரைச் செய்திகளைத் தெளிவாகக் கேட் டறிந்தவராதல் வேண்டும். இக் காரணங்களால் இளங்கோவடிகள் வளங்கெழு மதுரைமாநகரைச் சிறந்த சொல்லோவியமாக வரைந்து காட்டுகிறார்.

இரண்டாம் நூற்றாண்டில் மதுரைமாநகரைச் சூழ்ந்து மாபெரும் மதில் அமைந்திருந்தது. மதிலைச் சுற்றிலும் ஆழமான அகழியும், அதனைச் சூழ்ந்து அகன்ற காவற்காடும் அமைந்திருந்தன. இங்ஙனம் பல்வேறு வல்லரண்களால் குழப்பெற்ற மதுரையில்