பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய மதுரை

35


வாழ்ந்த மக்கள் என்றும் பகைவர் படையெடுப்பிற்கு அஞ்சியதுமில்லை; அந் நகரைவிட்டு அகன்றதுமில்லை. இதனால் இளங்கோவடிகள் அங்ககரைப், “பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்” என்று குறிப்பிட்டார். இளங்கோவடிகள் காலத்தில் மதுரைமாநகர் பகைவர் படையெடுப்பைக் கண்டதே யில்லை.

மதுரையைச் சூழ்ந்த மதிலில் பகைவரை அழிக்கும் பல்வேறு பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. வளைந்து தானே எய்யும் இயந்திர வில், கருவிரல் குரங்குப்பொறி, கல்லுமிழ் கவண், வெங்கெய்க் குழிசி, செம்பினை உருக்கும் குழிசி, இருப்பு உலகள், கல்லிடு கூடைகள், தூண்டிற் பொறி, பகைவரைக் கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலிகள், ஆண்டலைப் புள்ளின் வடிவாக அமைத்த அடுப்புகள், மதிலைப் பற்றியேறுவாரைப் புறத்தே தள்ளும் இருப்புக் கப்புகள், கழுக்கோல், அம்புக்கட்டுகள், ஏவறைகள், தன்னே நெருங்கியவர் தலையை நெருக்கித் திருகும் மரங்கள், ஊசிப்பொறிகள், சிச்சிலிப் பொறிகள், பன்றிப்பொறிகள், மூங்கில் வடிவில் அமைந்த பொறிகள், எழு, சிப்பு, கணையம், எறிகோல், குந்தம், வேல், குருவித்தலைப் பொறிகள் இன்னும் இவைபோன்ற வலிமிக்க பொறிகள் அமீைந்து, பகைவர் அணுகாது அச்சுறுத்தின. இத்தகைய மதிலின்மீது பாண்டியன் நாள்தோறும் பகை வரை வென்றுவென்று உயர்த்திய வெற்றிக் கொடிகள் வீறுடன் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன.

கொடிமதில் வாயிலைக் கடந்து நகருக்குள் புகுந் தால் நவமணிக் கடைகள் அமைந்த வீதியும், அறுவைக்