பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய மதுரை

37


நாடும் நகரமும் முறையே பாண்டிய நாடும் பழந்தமிழ் மதுரையுமே யாகும். அவர் காட்டும் மதுரையை நோக்குவோம்.

ஒரு காலத்தில் மதுரையும் அதனைச் சூழ்ந்த பகுதியும் கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தன. அக் காட்டின் கீழைப்பகுதியில் மணவூர் என்னும் ஊர் அமைந்திருந்தது. அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகரன் என்னும் மன்னன் பாண்டிய காட்டை ஆண்டுவந்தான். அவன் காலத்தில் மணவூரில் தனஞ்சயன் என்னும் வணிகன் ஒருவன் வாழ்ந்தான், அவன் ஒருநாள் வாணிகத்தின் பொருட்டு வேற்றுார்ச் சென்று, கடப்பங்காட்டு வழியே திரும்பிக் கொண்டிருந்தான். நடுவழியில் இருள் சூழ்ந்துவிட்ட காரணத்தால் அக் காட்டின் நடுவே ஓரிடத்தில் தங்கினன். அவன் தங்கிய இடத்தில் பொங்கொளி வீசிப் பொற்புடன் விளங்கிய விமானம் ஒன்றைக் கண்டான். அவ் விமானம் எட்டு யானைகளால் தாங்கப்பெற்று ஞாயிறு போன்று பேரொளி வீசியது. அதில் சிவலிங்கம் இருந்தது. அங்கு நள்ளிருளில் தேவர்கள் பலர் வந்து சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டனர். அதைக் கண்ட தனஞ்சயன் தானும் விமானத்தை நெருங்கிச் சிவலிங்கப் பெருமான வழிபட்டு மகிழ்ந்தான். பொழுது புலர்ந்ததும் அங்கு வழி பட்ட வானவரைக் காணுது வியந்தான். மீண்டும் இந்திர விமானத்தில் எழுந்தருளிய பெருமானைப் பணிந்து ஊரை அடைந்தான்.

மணவூரை அடைந்த வணிகனாகிய தனஞ்சயன் தான்கண்ட அதிசயத்தைப் பாண்டிய மன்னனிடம்