பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழ் வளர்த்த நகரங்கள்


சென்று தெரிவித்தான். அவன் கடம்பவனத்தில் கண்ட காட்சிகளையெல்லாம் தெளிவுற விளக்கினான். அவற்றைக் கேட்ட குலசேகரன் வியப்புடன் இறைவன் அருள் உள்ளத்தை எண்ணி மகிழ்ந்தான். அக்காட்சி களைப் பற்றிய உண்மையை, உணரமுடியாது வருக்தினான். அன்றிரவே இறைவன், பாண்டியன் கனவில் தோன்றிக் கடம்பவனத்தை அழித்துக் கடிநகர் அமைக்குமாறு பணித்தருளினான்.

மறுநாட் காலையில் மன்னன் அமைச்சர்களையும் சான்றோர்களையும் அழைத்துக் கனவில் கண்ட செய்தியையும் வணிகன் உரைத்த செய்தியையும் தெரிவித்தான். எல்லோரும் கடம்பவனத்தை அடைந்தனர். அரசன் ஆங்கிருந்த பொற்றாமரைத் திருக்குளத்தில் நீராடினன். இந்திர விமானத்தில் வீற்றிருந்த சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து இறைஞ்சினான் ; ஆனந்தக் கண்ணிர் சொரிந்தான். அந்த இடத்தில் திருக்கோவிலே அமைக்குமாறும், சுற்றியுள்ள காட்டை யழித்து நகரைக் காணுமாறும் அமைச்சர்க்கு ஆணையிட்டான். அமைச்சர் கோவிலும் நகரும் அமைக்கத் தொழில் வல்லாரை அழைத்து வருமாறு ஏவலரைப் பணித்தனர். காடுகள் அழிக்கப்பட்டதும் இறைவனே சித்தர் வடிவில் தோன்றிக் கோவிலும் நகரும் அமைக்கும் வகையினே ஆகம முறைப்படி வகுத்துக் காட்டி மறைந்தான்.

சித்தர் வகுத்தருளிய முறைப்படியே சிற்பநூல் வல்லார்கள் கோவிலும் நகரும் அமைத்தனர். திருக்கோவிலைப் பல்வேறு மண்டபங்களுடனும் கோபுரங்களுடனும் அமைத்தனர். நகரத்தை அணிசெய்ய