பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. நாயக்கர் அணிசெய்த மதுரை

கடைச்சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களால் கவின்பெற்று விளங்கிய மதுரைமாநகரம் பின்னைய நூற்றாண்டுகளில் அயல்மன்னர் பலருடைய படை யெடுப்புக்களால் அல்லற்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் பாண்டியநாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் பாண்டியநாடு கடுங்கோனால் மீட்கப் பெற்றுத் தன்னாட்சி பெற்றது. திரும்பவும் பத்தாம் நூற்றாண்டில் அது சோழர் ஆட்சியின் கீழ் அடிமை யுற்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சடாவர்மன் குலசேகரன் என்னும் பாண்டிய மன்னன் மீண்டும் பாண்டியநாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான். அதிலிருந்து நூறாண்டுகள் பாண்டியநாடு பழைய அரசுநிலையில் விளங்கிற்று. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்காபூர் முதலான முகலாயர்களின் தொடர்ந்த படையெடுப்புக்களால் பாண்டியர் ஆட்சி பாழ்பட்டது. மதுரையில் நாற்பத்துநான்கு ஆண்டுகள் முகலாயர் ஆட்சி நிலவியது.

இக்காலத்தில் விசயநகரப் பேரரசு வளர்ச்சியுற்று வந்தது. அதன் சார்பில் இரண்டாம் கம்பண்ணர் என்பார் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து வந்தார். அவர் தென்னாட்டில் முசுலீம் ஆதிக்கத்தை யொழித்துத் தமிழ்நாட்டை விசயநகரப் பேரரசுடன் இணைத்தார். பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விசுவநாத நாயக்கர் மதுரையில் தங்கி மதுரைநாட்டை ஆளத்