பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த சகாங்கள்


சோமசுந்தரப்பெருமான் நிகழ்த்தியருளிய அறுபத்து கான்கு திருவிளையாடல்களையும் திருவிளையாடற் புராணமாகத் தெய்வ மணங்கமழும் பாக்களால் ஆக்கி யுதவினார். மேலும் இவர் திருவிளையாடற் புராணத்தின் சாரமாக ‘மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’ என்ற ஒரு சிறு நூலையும் மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி’ என்னும் சிறு பிரபந்தத்தையும் பாடியருளினார்.

நான்காம் தமிழ்ச்சங்கம்

கடைச்சங்கம் மறைந்து பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர்ப் பாலவனத்தம் குறுநிலமன்னராகிய பாண்டித்துரைத் தேவரால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பெற்நிறது. இவ்வருஞ்செயலுக்குப் பெருந்துணையாக இருந்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதியாவார். இவ் விருவரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையாளர். ஒரு பொருளைப் பற்றிப் பல மணி நேரம் நீண்ட சொற்பொழிவாற்றும் ஆன்றமைந்த நாவலர்கள். பாண்டித்துரைத் தேவர் எப்பொழுதும் புலவர் குழாம் தம்மைச் சூழத் தமிழ்க்கலைப் பெருவெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருப்பார். பல நகரங்களுக்கும் சென்று இலக்கியச் சமயச்சொற்பொழிவாற்றி மக்களை மகிழ்விக்கும் இயல்பினராய் விளங்கினார்.

இத்தகைய தமிழ் நாவலராகிய பாண்டித்துரைத் தேவர் ஒருகால் மதுரைமாநகருக்குச் சொற்பொழிவின் பொருட்டு வந்திருந்தார். அவ்வமயம் ஒருசில குறிப்புக்களைப் பார்த்துக்கொள்ளுதற்காகக் கம்பராமாயணமும் திருக்குறளும் யாரிடமிருந்தேனும் பெற்றுவருமாறு