பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நெல்லை மாநகரம்
7. நெல்லையின் அமைப்பும் சிறப்பும்

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி

தென்பாண்டி நாட்டிலுள்ள பழமையான திரு நகரங்களுள் ஒன்று திருநெல்வேலி. இதன் நெல்லை யென்றும் சொல்லுவர். திருநெல்வேலியென்ற பெயரே நெல்லை என்று மருவி வழங்குகிறது. நகரைச் சுற்றிலும் நெற்பயிர் நிறைந்த வயல்கள் வேலியெனச் சூழ்ந்திருப்பதால் நெல்வேலியென்று பெயர்பெற்றது. சிவபெருமான் எழுந்தருளிய சிறந்த தலமாதலின் திருநெல்வேலி யென்று சிறப்பிக்கப்பெற்றது. தென்பாண்டி நாட்டிலுள்ள பாடல்பெற்ற பழம்பதிகளுள் இதுவும் ஒன்றாகும். ‘திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி’ என்று திருஞானசம்பந்தர் இந் நகரைப் பாராட்டி யருளினர்.

கோவிலும் விழாவும்

பாண்டிய நாட்டை மதுரைமாநகரிலிருந்து அரசாண்ட கூன் பாண்டியன் காலமாகிய ஏழாம் நூற்றாண்டிலேயே திருநெல்வேலி பெருமையுற்று விளங்கிய திருநகரமாகும். அதனலேயே திருஞானசம்பந்தர் இக் நகருக்கு எழுந்தருளிய நாளில் அப் பாண்டியன் தன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருடன் இங்குப் போந்து நெல்வேலியுறை செல்வராகிய சிவபெருமானை வழிபட்டேத்தினான். அப் பெருமான் திருக்கோவிலைக் கோபுரங்