பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழ் வளர்த்த நகரங்கள்


லுள்ள மலர்களிலிருந்து தேன் திவலைகள் சிந்தக் கண்டார். அதனால் தாம் பாடிய நெல்வேலிப் பதிகத்தில்,

“கங்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூங் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே”

என்று பொருநையாற்றின் பூந்துறையினைப் போற்றி யருளினர். அன்றுமுதல் ‘மதுத்திவலை சிந்துபூந்துறை’ என்ற பெயர் வழங்கப்பெற்றுப், பின்னாளில் அது சிந்துபூந்துறையெனக் குறுகியிருக்கவேண்டும். நெல்லை யப்பரது தீர்த்தத் துறையாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் பூந்துறை, திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தால் பெருமையுற்ற பழந்துறையாகும்.

குறுக்குத்துறை

கெல்லேமாககரின் மற்றாெரு துறை குறுக்குத்துறை யாகும். நெல்லையப்பர் கோவிலுக்கு நேராக அமைந்த பூந்துறை சற்று நெடுந்துாரத்தில் இருந்தமையால் மக்கள் ஆற்றிற்குச் செல்லக் குறுக்குவழியொன்று கண்டனர். வயல்களின் வழியாகச் சென்று பொருநையில் புதுத்துறை யொன்றை உண்டுபண்ணினர். அது குறுக்குவழியில் சுருக்கமான நேரத்தில் செல்லுதற்கு ஏற்றதா யிருந்ததால் குறுக்குத்துறையெனப் பெயர் பெற்றது. அத் துறையின் முன்துறையினே முன்னடித் துறையென்றும் மொழிவர்.

நெல்லையின் கல்லமைப்பு

பொருநைக் கரையில் அமைந்த வளங்கராகிய நெல்லைமாநகரின் அமைப்பு மிகவும் அழகு வாய்ந்தது. நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும்