பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல்லையின் அமைப்பும் சிறப்பும்

59


நகரமாகிய கொற்கையில் அமைந்திருந்தது. அங்ககரம் கடலுக்கு இரையான பின்னர், ஆங்கு வாழ்ந்த அக்க சாலைப் பணியாளர்கள் நெல்லைமாநகரில் குடியேறினர். அவர்கள் தாம் பணிசெய்த அக்கசாலையிலிருந்த விநாயகரைப் பழைய நினைவுக்குறியாகத் தாம் வாழப் புகுந்த நெல்லைப்பகுதியில் கொணர்ந்து கோவிலமைத்து. வழிபட்டனர். அத்தெருவே அக்கசாலை விநாயகர் தெரு எனப்பட்டது.

சம்பந்தர் திருக்கோவில்

இனி, இந்நகரின் மேல்பால் சம்பந்தர் தெரு அமைந்துள்ளது. அத் தெருவின் முகப்பில் திருஞான சம்பந்தர் திருக்கோவில் விளங்குகிறது. இந் நகருக்குச் சம்பந்தர் எழுந்தருளிய நாளில் இப்பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும். அதனுலேயே அவ்விடித்தில் அப்பெருமானுக்குத் திருக்கோவில் அமைத்து நெல்லை மக்கள் வழிபடலாயினர்.

நெல்லையைச் சூழ்ந்துள்ள ஊர்கள்

நெல்லைமாநகரைச் சுற்றிலும் பலப்பல சிற்றுார்கள் அமைந்துள்ளன. இந்நகரின் மேல்பால் அமைந்த பேட்டை யென்னும் பகுதி முன்னாளில் பெருத்த வாணிகம் நடைபெற்ற இடமாகும். வாணிகம் நடைபெறும் பகுதிகளைப் பேட்டையென வழங்குதல் பண்டை மரபு. இப் பேட்டையின் ஒரு பகுதியினைப் பாண்டியபுரம் என்றும், மற்றாெரு பகுதியினைத் திருமங்கை நகர் என்றும் வழங்குவதுண்டு. நின்றசீர் நெடுமாறனாகிய பாண்டிய மன்னன் நெல்வேலியைக் காணுதற்கு வந்த நாளில் அவனை நெல்லை நன்மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரமாயிற்று.