பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழ் வளர்த்த நகரங்கள்


அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாரை நெல்லைமா நகரத்து மகளிர்நல்லார் திரளாக வந்து எதிர்கொண்டு வரவேற்று உபசரித்த இடம் திருமங்கை நகர் என்னும் பெயர்பெற்றது என்பர். இந்நகரின் கிழக்கெல்லையில் அமைந்த வீரராகவ புரம், வீரராகவ முதலியார் என்பாரின் நினைவுக் குறியாக விளங்கி வருகிறது. நாயக்கர் ஆட்சியில் நெல்லைப்பகுதியை அவர் அதிகாரம் பெற்று ஆண்டு வந்த தளவாய் அரியநாயக முதலியாரின் வழித்தோன்றலாகிய வீரராகவ முதலியாரின் பெயரால் அப்பகுதி அமைந்துள்ளது. அவர் மனைவியாராகிய மீனாட்சி யம்மையாரின் பெயரால் அதனை யடுத்து மீனாட்சிபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. வீரராகவபுரத்தில் தான் திருநெல்வேலிச் சந்திப்புப் புகைவண்டி கிலேயம் அமைந்துள்ளது. இதன் வடபால் அமைந்த பகுதி சிந்துபூந்துறை யென வழங்குகிறது.

நெல்லையின் வடக்கு எல்லையாக அமைந்த சிற்றுார் தச்சனல்லூர் என்பதாகும். நின்றசீர்நெடுமாறனுகிய பாண்டியன் நெல்லைத் திருக்கோவிலை அமைக்கும் நாளில் அதனை உருவாக்க வந்த தச்சர்கள் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தெய்வத் திருப்பணி செய்து வந்த பணியாளர்களாதலின் அவர்கள் வாழ்ந்த பகுதி நல்லூர் என்று சொல்லப்பெற்றது. இங்நகரின் தெற்கு எல்லையாக விளங்கும் திருவேங்கடநாதபுரம், நாயக்கரது பிரதிநிதியாக நெல்லைநாட்டை யாண்ட திருவேங்கட நாதன் என்பார் பெயரால் திகழ்கின்றது.