பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழ் வளர்த்த நகரங்கள்


தங்கிய நாளில் நெல்லைத் திருக்கோவிலைப் பல்வேறு மண்டபங்களுடன் விரிவாக்கினன். இச் செய்தியைத் திருநெல்வேலித் தலபுராணப் பாடலொன்று வலி யுறுத்துகின்றது.

“நீதிதழைத் தோங்குதிரு நெல்வேலி
காதர்முன்பு நிலைபெற் றோங்கச்
சோதிமணி மண்டபத்தைத் தாயமக
கேளுவெனத் துலங்கச் செய்தே
வேதிகைபொற் படிதுாண்கள் விளங்குதிரு
வாயிலணி விரவிச் சூழ்ந்த
கோதில்மணிக் கோபுரமும் சேண்மதிலும்
வெள்விடையும் குலவச் செய்தான்.”

இப் பாடலால் நெடுமாறன் செய்த திருப்பணிகள் பல புலனாகும்.

மணிமண்டபம் இசைத்துண்கள்

சுவாமி கோவில் உள் சுற்றுவெளியை யொட்டிச் சங்கிதிக்குள் நுழையும் வழியில் அமைந்த மணி மண்டபம் நின்றசீர் நெடுமாறனால் அமைக்கப் பெற்றதே. அம் மண்டபத்தில் அமைந்துள்ள பத்துத் தூண்களில் ஆறு சிறியன, நான்கு பெரியன. பெருந் தூண்கள் நான்கும் அறுபத்துநான்கு சிறு தூண்களின் இணைப்பாக விளங்குவது வியப்பூட்டுவதாகும். ஒவ்வொரு சிறு தூணும் ஒவ்வொரு விதமான நாதம் எழும் இயல்புடையது. இவைகள் இசைத்தூண்கள் என்று ஏத்தப்பெறும்.

மாக்காளை-நந்தி

சுவாமி கோவில் முன்மண்டபத்தில் பலிபீடத்திற்கும் கொடிமரத்திற்கும் இடையே விளங்கும் வெள்விடை-நந்தி, மாக்காளே யென்று கூறப்படும்.