பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல்லைத் திருக்கோவில்

69


இதனை அமைத்தவனும் நெடுமாறனே. மாக்காளை மிகவும் கம்பீரமான தோற்றத்துடன், நோக்குவார் கருத்தையும் கண்ணையும் கவரும் சிறப்புடையது. இதனைக் காணுவார், ‘இது நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே யிருக்கிறது; இது மண்டபத்தைத் தட்டும் அளவு வளர்ந்துவிட்டால் அது உலகம் அழியும் கடை யூழிக்காலமாகும்’ என்று சொல்லிச் செல்லுவர்.

நந்திமண்டபச் சிற்பங்கள்

பலிபீடம், மாக்காளை, கொடிமரம் ஆகிய மூன்றும் ஒன்றன்முன் ஒன்றாகத் தோன்றும் காட்சி, பாசத்தைப் பலியிட்ட பசுவாகிய தூய உயிர், பதியை அணுகும் உண்மையை இனிது புலப்படுத்துவதாகும். இவ் உண்மையை விளக்கும் நந்திமண்டபத்தின் பெருங் தூண்களில் அழகிய சிற்பங்கள் பல காணப்படு கின்றன. ஒரு தூணில் காணப்படும் குறத்தியொருத்தியின் சிற்பம் கருத்தைக் கவர்வதாகும். அவள் தோளில் குழந்தையொன்றைத் தாங்கியிருப்பதும், கையில் கூடையொன்றைப் பற்றியிருப்பதும், நெல்லையப்பரைக் காதலராகப் பெறுதற்குத் துடித்து நிற்கும் தோகை யொருத்திக்கு நல்ல குறி சொல்ல அவள் கூர்ந்து நோக்குவதும், அவள் கொடிபோல் நுடங்கிக் குழைக் தாடி நிற்பதுமாகிய பொற்பான காட்சியைக் கண்டார், அச்சிற்பத்தை அவ்வளவு நுட்பமான வேலைப்பாடுடன் அமைத்த சிற்பியைப் போற்றாதிரார்.

மதனும் இரதியும்

மற்றொரு தூணில் மன்மதன் காட்சியளிக்கிறான், அவன் கரும்புவில்லை யேந்திக் கடிமலர்ப் பாணத்தைக் கையில் வைத்து எய்வதற்குத் தயாராக நிற்கும் ஏற்றுக்கோலம் மாற்றார் அஞ்சும் மாவீரக் கோல