பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல்லைத் திருக்கோவில்

73


அவற்றுள் ஏற்றத்தாழ்வு காட்டும் இயல்பு கம்மவரிடம் இல்லை. அவரவர் பக்குவ நிலைக்கேற்பப் பின் பற்றி யொழுகும் சமயங்கள் அவை என்பதை வலி யுறுத்துவதுபோல் நெல்லையப்பரும் நெல்லைக் கோவிந்தரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர்.

தாமிர சபை

சுவாமி கோவில் இரண்டாவது உள் சுற்று வெளியின் மேற்குப் பகுதியில் காணப்படும் தாமிர சபை மற்றாெரு தனிச் சிறப்புடையது. தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் ஐந்து சபைகளில் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றான். தில்லைப் பொன்னம்பலத்திலும், திருவாலங்காட்டு இரத்தின சபையாகிய மணிமன்றத்திலும், மதுரையில் இரசித சபையாகிய வெள்ளியம்பலத்திலும், நெல்லைத் தாமிர சபையாகிய செப்பு அம்பலத்திலும், குற்றாலச் சித்திர சபையிலும் அக் கூத்தப்பெருமான் ஆர்த்தாடும் தீர்த்தகைத் திகழ்கிருன். கூத்தப் பெருமானுக்குரிய ஐந்து சபைகளுள் ஒன்றாகிய தாமிர சபை நெல்லைத் திருக் கோவிலில் உள்ளதாகும். அது சிறந்த சிற்ப வேலைப் பாடுகள் நிறைந்தது. அதற்கு முன்னல் விளங்கும் நடன மண்டபம் கூரை வேய்ந்தது போலக் கல்லால் அமைந்திருக்கும் சிறப்பு, சிற்பியின் அற்புதமான திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இந்நடனமண்டபத்தில் மார்கழித் திங்கள் திருவாதிரை விழாவில் அழகிய கூத்தப்பெருமான் பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஆனந்த நடனமாடும் காட்சி கண்கொள்ளாப் பெருங் காட்சியாகும். தாமிர சபையின் பின்பக்கம் ஒரே கல்லில் அமைக்கப்பெற்ற