பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல்லைத் திருக்கோவில்

75


முகத்துடன் விளங்கும் அப் பெருமான் அழகே அழகு! ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகன்’ என்று பாடியருளிய அருணகிரிநாதரைப் போல, அவ் ஆறுமுகப்பெருமானது திருக்கோலத்தைத் தரிசிக்க எத்தனை கண்கள் இருந்தாலும் போதா என்றுதான் சொல்லவேண்டும். வழிபடும் அடியார்கள் பெருமானின் ஆறுமுகங்களையும் தரிசிக்கத் தக்கவாறு மண்டபம் அமைந்திருப்பது மற்றாெரு தனிச்சிறப்பு.

புலவர் முழக்கம்

அப்பெருமான் சந்நிதியில் அமைந்துள்ள கலியாண மண்டபம் பல்லாயிர் மக்கள் திரண்டு நின்று தரிசித்தற்கு ஏற்றவாறு இடையில் தூண்களின்றி விசாலமாக அமைந்திருப்பது ஒரு தனி யழகு. இச் சங்நிதியில் எந்த வேளையிலும் செந்தமிழ் முழக்கம் முழங்கிக் கொண்டே யிருக்கும். திருக்குறள் விளக்க முழக்க மென்ன ! திருவாசக உரை முழக்கமென்ன! திருவிளையாடல், கந்த புராண, பெரிய புராண முழக்கங்களென்ன திருப்புகழ், கந்தர் கலிவெண்பா இசைமுழக்கமென்ன! இங்ஙனம் எங்காளும் சங்கத்தலைவனுய் வீற்றிருந்த தமிழ் முருகன் சந்நிதியில் புலவர்கள் முழங்கிக்கொண்டே யிருப்பர்.

சங்கிலி மண்டபம்

சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பது சங்கிலி மண்டபம். சுவாமி கோவில் தெற்கு வெளிப்பிராகாரத்தின் நடுவே அமைந்துள்ள தெற்குக் கோபுரவாயில் தொடங்கி, அம்மன் கோவில் வரை யமைந்துள்ள நீண்ட தொடர்மண்டபம் முப்பதடி அகலமும் முந்நூறடி நீளமும் உள்ள ஒரு பெரு