பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழ் வளர்த்த நகரங்கள்


மன்றமாகும். ஒசங்களில் இருபக்கமும் வரிசையாகத் தூண்கள் அமைந்திருக்கும் அழகு மிகவும் அணி வாய்ந்ததாகும். இதனை முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் நெல்லைப்பகுதியில் அரசு செலுத்திய வடமலையப்பப் பிள்ளையன் என்பார் அமைத்தனர்.

ஊஞ்சல் மண்டபம்

காந்திமதியம்மன் திருக்கோவில் முகப்பில் கோபுர வாயிலை யடுத்து ஊஞ்சல் மண்டபம் விளங்குகின்றது. இது தொண்ணுாற்றாறு திண்ணிய தூண்களால் அமைக்கப்பெற்றது. சமயத் தத்துவங்கள் தொண்ணுாற்றாறு என்ற உண்மையை விளக்கி நிற்பது இம் மண்டபம். நடு மண்பத்தினைத் தாங்கும் இருபத்து நான்கு தூண்களும் வாய்பிளந்து முன் கால்களைத் தூக்கிநிற்கும் யாளிகளுடன் விளங்குவது ஒரு தனியழகாகும். இதனேக் கட்டியவர் பிறவிப் பெருமாள் பிள்ளையன் என்பார்.

காந்திமதியம்மை சங்கிதி

அம்மன் கோவில் கருவறையுள் காட்சியளிக்கும் காந்திமதித்தாய், உலகின்ற அன்னையாயினும் கன்னி யாகவே காட்சி தருவாள். வயிர மணிமுடி புனைந்து, நவமணி அணிகள் பல பூண்டு, பாதச்சிலம்புடன், பங்கயத் திருக்கையால் அஞ்சலென அருள்செய்து நிற்பது, அவள் அரசியாய் உலகிற்கு விளங்கும். திறத்தைப் புலப்படுத்தும். வடிவம்மை என்று வழங்கும் அவளது பழம்பெயருக்கேற்ப அவளது வடிவைச் சிற்பி அழகாகவே வடித்துள்ளான்.

வடிவம்மையின் வாயிலாக நெல்லையப்பர் திருவருளைப் பெறுதற்கு முயன்ற பலபட்டடை அழகிய