பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல்லைத் திருக்கோவில்

77


சொக்கநாதப் புலவர் என்பார், அம்மையை வேண்டும் முறை மிகவும் விநயமாக இருக்கிறது. ‘நெல்லையப்பர் நின்னொடு கொஞ்சிப்பேசும் வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக அடியேனுடைய குறைகளைக் கூற லாகாதா ? அங்ஙனம் கூறினால், அன்னையே! நின் வாயில் உள்ள முத்துக்கள் சிந்திவிடுமா ?’ என்று புலவர் பரிவுடன் கேட்கிறார்.

“ஆய்முத்துப் பக்தரின் மெல்லணே
மீதுன் அருகிருந்து
நீமுத்தம் தாவென்(று) அவர் கொஞ்சும்
வேளையில் நித்தநித்தம்
வேய்முத்த ரோ(டு)என் குறைகளெல்
லாமெல்ல மெல்லச்சொன்னால்
வாய்முத்தம் சிந்தி விடுமோ
நெல்வேலி வடிவன்னேயே!”

என்பது அப் புலவரது நயமான பாடல்.

கருமாறித் தீர்த்தம்

காந்திமதியம்மன் கோவில் மேலைச் சுற்றுவெளியில் கருமாறித் தீர்த்தம் உள்ளது. அதனை மக்கள் ‘கருமாதி’ என்று வழங்குவர். துருவாச முனிவரது சாபத்தால் யானையுருப் பெற்ற இந்திரத்துய்மன் என்னும் மன்னன் இத் தீர்த்தத்தில் மூழ்கித் தன் பழைய வடிவைப் பெற்றான். அதனால் கருமாறித் தீர்த்தமென்றும் கரிமாறித் தீர்த்தமென்றும் வழங்கும். (கரி - யானை)

பொற்றாமரைத் தீர்த்தம்

அம்மன் கோவில் முன்னமைந்த ஊஞ்சல்மண்ட பத்தின் வடபால் பொற்றாமரைத் தீர்த்தம் உள்ளது. இறைவனே நீர் வடிவாகப் பிரமன் பொன்மலராகப் பூத்த புண்ணியத் தடாகம் இப் பொற்றாமரைத்