பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழ் வளர்த்த நகரங்கள்


என்பார் ஈசான தேசிகரிடம் தமிழ் பயின்றவரே. சங்கரருமச்சிவாயரும் நெல்லை நகரத்தைச் சேர்ந்தவரே.

மயிலேறும் பெருமாள்

இவர்கள் வாழ்ந்த பதினேழாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் வாழ்ந்த மற்றாெரு பெரும்புலவர் மயிலேறும் பெருமாள் பிள்ளையென்பார். இவர் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவர் ; சிவபத்தி மிக்க சிலர் : துறைசை யாதீனத் துடன் தொடர்பு கொண்டவர்; ஆதீனச் சீடருள் சிறந்தவர்; தமிழ்ப் புலவரை ஆதரிக்கும் அருள் வள்ளலாகவும் விளங்கினார் ; கல்லாடம் என்னும் நூலுக்கு நல்லுரை வகுத்த நாவலருமாவர். இவர் ஈசான தேசிகருக்கு நேசமான நட்பாளராக விளங்கினர்.

தேசிகரின் நூல்கள்

சங்கர நமச்சிவாயரைப் போன்ற சான்றார்களைத் தோற்றுவித்த ஈசானதேசிகர் இலக்கணக் கொத்து, தசகாரியம், சிவஞானபோதச் சூர்ணிக்கொத்து, கடம்ப நாத புராணம், திருச்செந்திற் கலம்பகம் போன்ற நூல்களை இயற்றித் தமிழையும் சைவத்தையும் வளர்த்து வந்தார்.

வடமலையப்பர்

திருச்சிராப்பள்ளியில் சொக்கநாத நாயக்கர் அரசாண்ட காலத்தில் நெல்லை நாட்டினை வடமலையப்பப் பிள்ளையன் என்பார், அவரின் பிரதிநிதியாய் இருந்து ஆண்டு வந்தார். இவரைப் பிள்ளையன் என்றே எல்லோரும் சொல்லுவர். கார்காத்த வேளாளர் குலத்தில் தோன்றியவராகிய பிள்ளையன் அரசியல் திறமையுடன் அருந்தமிழ்ப் புலமையும் நன்கு