பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த நெல்லை

81


வாய்க்கப்பெற்றவர். இவர் தெய்வ பத்தியும் அருள் நெஞ்சமும் படைத்தவர். அறப்பணிகள் பலவும், கோவில் திருப்பணிகள் பலவும் விருப்புடன் செய்தவர். இத்தகைய பெருஞ்செல்வராகிய பிள்ளையன், தமிழ்ப் புலவர்களே ஆதரிக்கும் தண்ணளியுடையாராய் இருங்தார். இவர் மச்சபுராணம், நீடூர்த் தலபுராணம், புலவராற்றுப்படை போன்ற நூல்களை இயற்றித் தமிழை வளர்த்தார்.

தென்திருப்பேரைத் தீட்சதர்

வடமலையப்பப் பிள்ளையனால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் வரி வசூலிக்கும் பொருட்டுத் தென் திருப்பேரைக்குச் சென்றார். அங்கிருந்த வைணவர்களிற் சிலர் வரி செலுத்தவில்லையென்ற காரணத்தால் அவர்களைத் திருநெல்வேலிக்குக் கொண்டுவந்து சிறையி லிட்டார். அங்ஙனம் சிறைப்பட்டவர்களுள் நாராயண தீட்சதர் என்பாரும் ஒருவர். அச் சிறைக்கூடம் இருந்த தெருவிற்கு இப்போது காவற்புரைத்தெரு என்னும் பெயர் வழங்கிவருகிறது.

குழைக்காதர் பாமாலை

சிறைப்பட்ட நாராயண தீட்சதர் ஒரு செந்தமிழ்ப் புலவர். அவர் எப்போதும் தமிழ் நூல்களைப் படித்து இன்புற்றும், தென்திருப்பேரையில் எழுந்தருளிய மகரநெடுங் குழைக்காதராகிய திருமாலே வழிபட்டும், அவர்மீது கவிதை புனைந்தும் வாழ்வை இன்பமாகக் கழித்துவந்தார். இத்தகைய தீட்சதர், தமக்கு ஏற்பட்ட சிறைவாழ்வைக் குறித்துச் சிங்தை கொந்தவராய் மகர நெடுங்குழைக்காதராகிய திருமாலை உளமுருகி வழிபட்டுத் துயர்நீக்கி யருளுமாறு வேண்டினர்;

த. வ. ந.-6