பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த நெல்லை

85


பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம்

இவர் பாடிய காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், நெல்லையப்பர் திருக்கோவிலிலுள்ள காந்திமதியம்மை சங்கிதிக்கண் அமைந்த ஊஞ்சல் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்றப் பேரவைக்குத் தலைமை பூண்ட இராசை முத்துசாமி வள்ளல், புலவருக்குப் பொன்னடை போர்த்தியும், தம் காதுகளில் அணிந்திருந்த விலையுயர்ந்த வைரக் கடுக்கனைக் கழற்றிப் புனை வித்தும் போற்றினர். இப் புலவரின் தந்தையாரான வன்னியப்ப பிள்ளையும் சிறந்த தமிழறிஞரே. அவரிடமே அழகிய சொக்கநாதர் தமிழ் பயின்று தேர்ந்தவர்.

பேராசிரியர் சுந்தரனார்

மனோன்மணியம் என்னும் நாடக நூலை இயற்றி நாடகத் தமிழுக்குப் புத்துயிரளித்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை நெல்லைமாநகரில் கல்லூரித் தலைவராகப் பணியாற்றும் காலத்திலேயே அந்நூலைப் பாடி முடித்தனர். சென்ற நூற்றாண்டில் நெல்லைமாநகரில் தத்துவ ஞானத்தில் சிறந்து விளங்கிய கோடக கல்லூர்ச் சுந்தர சுவாமிகள் என்னும் பெரியாரை ஞானசிரியராகப் பெற்று, அவர்பால் ஞான நூல்களைக் கற்றுணர்ந்த சுந்தரம்பிள்ளை, தாம் பெற்ற தத்துவ ஞானத்தின் சாரத்தை மனேன்மணிய நூலில் குழைத் துக் காட்டியுள்ளார்.

இந்த நூற்றாண்டில்

இவ் இருபதாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் சிறந்து விளங்கிய பெரும்புலவர்கள் பலர். நெல்லையைச் சார்ந்த முந்நீர்ப், பள்ளத்தில் தோன்றிய பேரறிஞ