பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழ் வளர்த்த நகரங்கள்


ராகிய பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலமும் தமிழும் வல்ல பெரும்புலமையாளர். அவர் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் வகுத்துக் கொடுத்த வல்லாளர். இந்நகரில் தோன்றிய, ‘எம்மெல்’ பிள்ளை யென்று தமிழ் வல்லார் போற்றும் பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை கலைநலம் சிறந்த சைவப் பேரறிஞர். வையாபுரிப் பிள்ளை சிறந்த இலக்கிய ஆய்வாளர். சொல்லின் செல்வராகிய இரா. பி. சேதுப்பிள்ளை இனிய செந்தமிழ் நாவலர். இவர்கள் எல்லோருமே தமிழும் ஆங்கிலமும் வல்ல பேரறிஞர்கள். இவர்கள் அரசியற் புறக்கணிப்பு, ஆங்கில அறிஞர்களின் புறக்கணிப்பு, அதிகாரிகளின் புறக்கணிப்புக் களிடையே தமிழைப் புரந்து வந்த சிறந்த கலைஞர்களாவர்.

திருவரங்களுர் பெருமுயற்சி

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந் நகரில் திருவரங்களுரின் பெருமுயற்சியால் தோற்றுவிக்கப் பெற்ற தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழில் பல துறை நூல்களையும் வெளியிட்டுத் தமிழை வளர்த்து வருகிறது. கழகத்தின் உறுப்புக் களாக அமைந்துள்ள தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச்சங்கம் இவற்றின் வாயிலாகச் சமயத் தமிழ்ப் பணிகள் பல நடைபெற்று வருகின்றன. இவற்றை இங்காளில் கழகம் கிறுவிய திருவரங்கரிைன் தம்பியார் வ. சுப்பையாப் பிள்ளையவர்கள் திறம்பட நடாத்தி வருகின்றனர்.