பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழ் வளர்த்த நகரங்கள்


பாடல்பெற்ற பழம்பதி

தேவாரம் பாடிய மூவர்களால் போற்றிப் பாடப் பெற்ற தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்று பாராட்டுவதுண்டு. தில்லையை அம் மூவர்மட்டுமன்றி, மாணிக்கவாசகர் தாம் பாடிய திருவாசகத்தில் இருபத்தைந்து பதிகங்களால் சிறப்பிக்கின்றார். இம் மாணிக்க வாசகர் தில்லைக் கூத்தனைத் தலைவனாகக்கொண்டு திருக்கோவையார் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். திருவிசைப்பாவில் பதினைந்து பதிகங்கள் தில்லையைப் பற்றியனவாகும். திருப்பல்லாண்டில் பன்னிருபாக்கள் இத்தலத்தைப் பற்றியனவாகும். இவையன்றிக் குமரகுருபரர், இராமலிங்க அடிகள் போன்ற அருளா ளர்கள் பாடிய பாடல்கள் அளப்பில. இத் தன்மை யால் தில்லை, பாடல் பெற்ற திருத்தலமாகும்.

தில்லைவாழ் அந்தணர்

‘தில்லை மூவாயிரம் செந்தில் ஆயிரம்’ என்று ஒரு பழமொழியுண்டு. தில்லைக் கூத்தனை முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் பேறுபெற்ற அடியார்களாகிய தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர் முன்னாளில் விளங்கினர். திருச்செந்தூரில் கந்தவேளைச் சந்ததமும் வழிபடும் அந்தணாளர்கள் ஆயிரம்பேர் விளங்கினர். இதனாலேயே ‘தில்லை மூவாயிரம் செந்தில் ஆயிரம்’ என்னும் பழமொழி எழுந்தது. இத்தில்லை வாழ் அந்தணருள்ளே தானும் ஒருவன் என்று இறைவன் கூறி இன்புற்றான் என்பர். சுந்தரர் திருத் தொண்டத்தொகை பாட முற்பட்டபோது அடி யெடுத்துக் கொடுத்தருளிய இறைவன் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று முத