பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில்லையின் சிறப்பு

91

லடியை அருளிச்செய்தான். அத்தகைய அந்தணர் மூவாயிரவர் சிறப்புற்று விளங்கிய மூதூர் தில்லைப் பதியாகும்.

காண முத்திதரும் தலம்

முத்தியளிக்கும் சத்தி வாய்ந்த தலங்கள் சிலவற்றைச் சிறப்பாகக் குறிப்பர் அறிஞர். அவற்றுள் அண்ணாமலை, எண்ணிய வளவில் முத்திதரும் அருந்தலமாகும். ஆரூர், பிறக்க முத்திதரும் பெருந்தலமாகும். காசி, இறக்க முத்திதரும் இனிய தலமாகும். தில்லை, காண முத்திதரும் திருத்தலமாகும். இத்தகைய தலத்தில் திருநாளைப்போவார் என்னும் நந்தனர், திருவாசகம் அருளிய மணிவாசகனர், திருநீலகண்ட நாயனர் போன்ற சிறந்த அடியார்களுக்கு இறைவன் முத்திப்பேறளித்தான்.

இத் தலத்தைச் சுற்றிலும் பாடல் பெற்ற சிவத் தலங்களே சூழ்ந்துள்ளமை ஒரு தனிச் சிறப்பாகும். இத் தலத்தின் கிழக்கே திருவேட்களமும், தெற்கே திருநெல்வாயில், திருக்கழிப்பாலை, சீர்காழி, புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களும், வடக்கே திருப்பாதிரிப் புலியூரும் அமைந்துள்ளன.

பொன்மேனி பெற்ற மன்னன்

ஆறாம் நூற்றாண்டில் விளங்கிய பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பான் தில்லைக்கூத்தனைத் தரிசிக்க வந்தான். இங்குள்ள சிவகங்கைக் குளத்தில் நீராடித் தனது பெருநோய் நீங்கப்பெற்றான். அவன் மேனியும் பொன்வண்ணமாகப் பொலிவுற்றது. இக் காரணத்தால் அவன் ‘இரணியவர்மன்’ என்று