பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழ் வளா்ந்த கதை

முடியாதே ! ஒரு நாக்குடைய நான் எப்படிச் சொல்வேன் ! நீங்களோ கேட்க உட்கார்ந்திருக்கிறீர்கள். நான் சொல்லாமற்போனால் விடமாட்டீா்கள். அதனாலே எனக்குத் தெரிந்தமட்டும் சொல்கிறேன, கேளுங்கள்.

பாட்டு


பேரவையில் கூடியுள்ள பெரியோரே! கேளுங்கள்
சீரான தமிழ்வளர்ந்த செய்தியினைக் கேளுங்கள்
நேராகக் கேடுபல நிலைகுலைக்க வந்தாலும்
பேராது தமிழ்வளர்ந்த பெருங்கதையைக் கேளுங்கள்

இசை வேறு


தமிழர் திருநாடே தாரணியில் முதல்தோற்றம்
அமுத மொழிகண்டார் அருந்தமிழர் அங்காளில்
இயற்கையோ டியைந்தமொழி இன்பம் நிறைந்ததமிழ்
நயங்கள் நிறைந்தமொழி நல்லறிஞர் கண்டதமிழ்
எப்போ பிறந்ததென்று எவரும் அறிந்ததில்லை
ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே
குமரியின் தென்திசையில் குளிர்ந்த வளநாடு
தமிழர் திருநாடு தழைத்தோங்கி யிருந்ததையோ!
அந்நாட்டில் தென்மதுரை அழகான நன்னகரில்
தென்னன் தமிழ்ச்சங்கம் திறம்பெறவே அமைத்திட்டான்
கன்னித் தமிழ்மொழியைக் கருத்தாய் வளர்த்திட்டான்
பன்னூறு புலவரதில் பழந்தமிழை ஆய்ந்திட்டார்
பின்னர்க் கபாடபுரம் பெரியதொரு தமிழ்நகரம்
மன்னு தமிழ்ச்சங்கம் மறுபடியும் அமைத்திட்டான்
அதிலும் பலபுலவர் அருந்தமிழை ஆய்ந்திட்டார்
மதிநுட்ப நிறைபுலவர் பலநூல்கள் வரைந்திட்டார்
இருசங்க நூல்களையும் பெருங்கடல் விழுங்கியதே