பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்ந்த கதை

11


அரிய பலநூல்கள் அழிந்ததற்குக் கணக்கில்லை
தொல்காப் பியம்ஒன்றே நின்று துலங்கியது
ஒல்காப் புகழுடைய உயர்ந்த இலக்கணத்தை

(ஆத்திரத்துடன்)

விழுங்காது தான்விட்ட வியன்கடலைப் பாண்டியனும்
அழுங்கிப் புலம்பிடுவாய் அலைகடலே என்றென்றும்
புரண்டு புரண்டழுவாய் புவியோர் சிரிக்கவென்றும்
திரண்டவுன் னீரெல்லாம் வறண்டொழிவ தாகவென்றும்
பழித்துச் சபிக்கவில்லை-(கடலைப்)-பழித்துச்சபிக்கவில்லை
வழுத்தித் துதித்துநின்றான் வாயாரப் பாண்டியனும்
தமிழ்முனி அகத்தியனோடு தாங்கவொண்ணாக் கோபங்

/கொண்டான்.


இசை வேறு

இமைப்பொழுதும் ஓயாது இரங்கிப் புலம்பியழு
கடலே இடைவிடாமல் கதறி அழுதிடுவாய்
மடமை யொழியுமட்டும் மண்டையில் அடித்தழுவாய்
என்று சபித்திட்டான் தென்றமிழ்ப் பொதியமுனி.

இசை வேறு

அன்றே தமிழ்ச்சங்கம் மீண்டும் அமைத்திட்டான்
தென்மதுரைப் பொன்னகாில் சங்கம் திகழ்ந்ததையோ!
மன்னன் அமைத்திட்ட மாபெரும் சங்கமதில்
நக்கீரர் முதலான நாற்பத்தொன் பதுபுலவர்
தக்க தமிழ்மொழியை ஆராய்ந்து தானிருந்தார்
அந்தக் கடைச்சங்கம் அமர்ந்த தமிழ்ப்புலவோம்
சிந்தைக் கினியபல செந்தமிழ்ப் பாமாலை
தொடுத்துத் தமிழ்த்தாயைத் தூயஅணி செய்தார்கள்
அடுத்த கவிஞரெல்லாம் அழகுபல செய்தார்கள்.