பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்ந்த கதை

13


குயவன் மாண்ட செய்தி மதுரைமா நகரில் எங்கும் பரவியது. மன்னன் பாண்டியனும் அறிந்தான். மாபெரும் சங்கப் புலவர்கள் அறிந்தார்கள். அறியாமையால் அங்ஙனம் முரசறைந்த,—எங்ஙனம்? “ஆரியம் நன்று தமிழ் தீது” என்று முரசறைந்த குயவன் காெண்டானை மன்னித்து உயிர்ப்பிச்சை யளிக்குமாறு நக்கீரரை வேண்டினார்கள். மனமிரங்கிய நக்கீரர்,

பாட்டு

ஆரியம் நன்று தமிழ்தீது எனவுரைத்த
காரியத்தால் காலக்கோட் பட்டானைச்—சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால்
செந்தமிழே தீர்க்க சுவாகா !

வசனம்

என்று பாடினாா். குயக்கொண்டிான் உயிர்பெற்றெழுந்தான். எழுந்ததும் நக்கீரர் திருவடிகளில் விழுந்து பணிந்தான். தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்.

இங்ஙனம் நாவீறு படைத்த நக்கீரா் போன்ற புலவா்களையன்றி, நாடாண்ட புலவர்களும்—அரசர்களும் நம் நற்றமிழைப் பொன்னேபோல் போற்றி வளர்த்தனர்.

பாட்டு

இசை வேறு

செழியன் கரிகால் வளவன் சேரன்
மழைபோல் வழங்கும் மாபெரு வள்ளல்கள்
பாரி முதலாம் பலகொடை மன்னர்கள்
சீரிய செந்தமிழ்ப் புலவரைப் போற்றினர்
புலவர் மொழிகளைப் பொன்னென எண்ணினர்
அலகில் பரிசுகள் அகமகிழ்ந் தீந்தனர்