பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த கதை

15


வாழ்ந்ந அந்தக் கவிஞரெல்லாம் செந்தமிழில் பல்லாயிரம் பாடல்களைப் பாடினார்கள். அந்த நாளில் அரசர்களும் அரசியர்களுங்கூடப், பெரும்புலமைபெற்று விளங்கினார்கள். அரண்மனைக் காவற்பெண்டும் (வேலைக்காரி) கன்னித் தமிழ்க் கவிதை பாடினாள். வெண்ணிக்குறத்தியும், குறமகன் இளவெயினியும் கொழிதமிழ்ப் பாடல் பாடினார்கள்.

பாண்டிய மன்னன் ஒருவன்—தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்பவன் ஒருகால் வஞ்சினம்(சபதம்) ஒன்று கூறினான்.

"நான் செய்யப்போகும் போரில் பகைவரை வெற்றி கொள்ளாவிட்டால், மாங்குடி மருதன் முதலான புலவரகள் என் நாட்டைப் பாடாதொழிக !" என்று சூளுரைத்தான். இதிலிருக்து அப் பாண்டியன், புலவர்பால் கொண்ட பெருமதிப்பையும் தமிழிடத்துக் கொண்ட தணியாத வேட்கையையும் என்னென்பது !

"தன் தலைதனைக் கொண்டுபோய்த் தம்பி கைக்கொடுத்து, விலைதனைப் பெற்று வறுமை நோய் களை"யுமாறு புலமையாளனுக்கு அன்புமொழி கூறிய குமண வள்ளலின் தமிழார்வத்தை எங்ஙனம் போற்றுவது !

இங்ஙனம் தமிழ் வளர்க்கும் தாதாக்களாகத் தமிழ் மன்னரெல்லாம் விளங்கியமையாலேயே தமிழ் வளர்ந்தது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய நூல்களெல்லாம் தோன்றின.

பாட்டு

நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு
கற்றவர் மெச்சும் கலித்தொகை யின்பம்