பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ் வளர்ந்த கதை

பதிற்றுப் பத்து, பரிபாட்டு அகம்புறம்
இதமுறும் எட்டுத் தொகைநூல் கண்டோம்
திருமுரு காற்றுப் படைமுத லான
பத்துப் பாட்டு முத்தணி கண்டோம்
தெய்வப் புலவர் தந்தசெங் கோலாம்
உய்வைத் தருநூல் உயர்ந்த திருக்குறள்
உலகம் முழுதும் ஏற்கும் ஒருநூல்
பலகலை நுட்பமும் குலவும் தனிநூல்
பாலென இனிக்கும் பார்புகழ் முப்பால்
காலமும் தேசமும் கடந்தது அப்பால்
அறம்பொருள் இன்பமாம் உறுதிப் பொருளைத்
திறம்பெறத் தெளிவாய் உரைக்கும் மறைநுால்
வையகம் வாழ வள்ளுவர் தந்தநுால்
கையகம் தாங்கிக் காத்தனள் அன்னை.

வசனம்

தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் தந்தருளிய தமிழ் வேதத்தின் பெருமையைக் கேளுங்கள !

பாடல்

சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து-முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனாா்
பன்னிய இன்குறள்வெண் பா.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தனந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஒர்ந்து.