பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழ் வளர்ந்த கதை

இசை வேறு

உளங்கவர்ந் திணிக்கும் உயர்ந்த காவியம்
இளங்கோ புனைந்த முழங்கொலிச் சிலம்பு
திருத்தக்கர் சூட்டிய சிந்தா ஒளிமணி
சாத்தனார் அணிந்த தனிமணி மேகலை
குண்டல கேசியும் வளையா பதியும்
கொண்டணி பூண்டாள் தண்டமிழ் அன்னை
சேரர் வீரம் கூறிடும் பெருநூல்
பார்புகழ் பதிற்றுப் பத்தெனும் வடிவாள்
பதினெண் சின்னூல் பதக்கம் தாங்கினள்
நாவுக் கரசர் ஞானசம் பந்தர்
சுந்தரர் வாசகர் தந்த பா மாலைகள்
அருளொளி வீசும்பொருள்நிறை மணிகள்
சேக்கிழார் அருளிய தெய்வத் திருநுால்
பாக்களோ பக்திச் சுவைநனி சொட்டும்
பெரிய புராணம் அரிய காவியம்
ஆழ்வா ராதிகள் அருளிய பாசுரம்
கம்பன் தந்த களிமிகு காவியம்
மெய்கண்ட தேவரின் கைகண்ட ஞானம்
செய்தற் கரிய சித்தாந்த சாத்திரம்
வில்லி சொல்லிய வீர பாரதம்
எல்லாம் சமய இன்பத் தமிழாய்
வல்லார் பேணி வளர்த்தனர் அன்று
புறப்பொருள் அகப்பொருள் தந்த புலவர்கள்
நன்னுால் இலக்கணம் நவின்ற பவணந்தி
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க் கினியர்
மெச்சிடும் சேனா வரையர் பூரணர்
பேரா சிரியர் சீர்கல் லாடர்
ஆராய்ந்த நல்லுாரைப் பரிமே லழகர்