பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்ந்த கதை

19



அடியார்க்கு நல்லார் ஆகிய பல்லோர்
முடிவில் உரைகள் மொழிந்து காத்தார்.
வெண்பாவில் புகழேந்தி என்று வியந்திடும்
ஒண்பா வாணன் ஒட்டக் கூத்தன்
மாதர் நோக்கனைய வாக்கினில் வல்லான்
யாதையும் ஒட்டிப் பாடும் வித்தகன்
தேர்ந்த சந்தத் தீங்கவி பாடுவான்
ஆய்ந்தி டும்படிக் காசன் அரியவன்
அந்த கக்கவி வீர ராகவன்
பந்த நற்கவி பாடும் இரட்டையர்
அருண கிரிநாதன் கருணைக் கவிஞன்
பொருள்மிகு பாக்கள் புனைபொய் யாமொழி
முற்றும் துறந்த பட்டினத் தடிகள்
சற்றும் பற்றில்லாத் தாயு மானவர்
சமரச நன்னெறி காட்டிய தந்தையார்
அமுதப் பாக்கள் அருளிய வள்ளலார்
இன்னவர் எல்லாம் இதயம் கனிந்து
சொன்னசெஞ் சொற்கவி எண்ணில் அடங்கா !

வசனம்

அந்தக்காலத்தில் அரசியொருத்தி—குலோத்துங்கச் சோழனது பட்டத்தரசி, ஒட்டக் கூத்தன் பாட்டைக் கேட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அதுவும் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டாளாம். 'ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்ற பழமொழி எல்லோரும் தெரிந்தது தானே ! இந்தக் காலத்திலே நம் பெண்களெல்லாம் பண்ணமைந்த தமிழ்ப்பாட்டைக்கேட்டு என்ன செய்கிறாா்கள் ? இரண்டு காதுகளையும் பொத்திக் கொள்கிறார்களோ ? இல்லை இல்லே ! தமிழார்வம் பொங்கித்