பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழ் வளர்ந்த கதை


பாட்டு

குமர குருபரர் அமர கவிஞர்
சிவஞான முனிவர் சிவப்பிர காசர்
கச்சி யப்பர்முதல் ஒப்பில் கவிஞர்கள்
வீச்சைகொள் வாக்கால் மிக்கொளி செய்தார்
புலவர்க்கு ஒளடதம் என்று போற்றிடும்
நலமிகு நைடதக் காவியம் நல்கி
அதிவீர ராமன் அருந்தொண்டு புரிந்தான்
மதிவர துங்கனும் மாண்பணி புரிந்தான்
கண்ணூறு கழிக்கக் காள மேகப்
பண்ணூறு வசைக்கவி பாடித் தொலைத்தான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய
தேனிகர் நூல்கள் தெவிட்டாக் களஞ்சியம்
ஊறிய சைவத் துயர்தமிழ் வல்லார்
ஆறுமுக நாவலர் அரும்பணி செய்தார்
அரியகுற் றாலக் குறவஞ்சி அளித்தார்
திரிகூட ராசப்பத் தீங்கவி வாணர்
சுந்தரம் பிள்ளை தந்த நாடகம்
நந்தம் மனோன்மணி நவமணிக் குவியல்
பரிதிமால் கலைஞர் பணிபல செய்தார்
அரிது முயன்ற சாமிநா தையர்
அச்சிட் டுதவினர் அருந்தமிழ் நூல்கள்
அழகிய சொக்காின் அரிய பாடல்கள்
வேப்பா சூவின் வியத்தகு ஞானம்
கேட்போர் விரும்பக் கிளர்சுவை யூட்டும்
விச்சையில் வல்ல வீரச் சிதம்பரம்
திக்கெட் டும்தமிழ் முரசு கொட்டினார்
அயல்நாட் டிருந்து வந்த அறிஞர்கள்
நயமிகு வீரமா முனிவர் நாவலர்