பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழ் வளர்ந்த கதை

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒருசொல் கேளிர் !
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

வசனம்

என்று தமிழின் பெருமையையும் தமிழ்ப் புலவர் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும் நாடெங்குக் கொட்டி முழக்கினாா். முரசு கொட்டி முழக்கினார். பாரதியின் வீர முழக்கத்தைக் கேட்டுத் தமிழர் விழித்தெழுந்தனர். 'சுதந்திரம் எமது பிறப்புரிமை, அதனை அடைந்தே தீருவோம்' என்று வீறுகொண்டனர். 'அடிமை விலங்கைத் தகர்த்தெறிவோம்' என்று ஆர்ப்பரித்தனர். அவ்வளவு வீர உணர்ச்சியை ஊட்டியது பாரதியின் பாட்டு!

பாட்டு

நாமக் கல்லார் நாட்டுக் கவிஞர்
தாமும் தமிழைத் தாங்கிப் பிடித்தார்
கவிமணி பாடிய இனிய கவிதைகள்
புவியினர் போற்றும் புத்தரின் சரிதம்