பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ் வளர்ந்த கதை



செய்தித் தாட்கள் செய்யும் சேவைகள்
உய்வைத் தமிழுக்கு உவந்தளிப் பனவே
ஞானியா ரடிகளின் ஞான நயவுரை
மாணிக்க நாயகர் ஆணிப்பொன் னறிவு
மறைமலை யடிகளின் உரைநடை நூல்கள்
கழகம் நிறுவிய கவினறி வாளர்
திருவரங்காின் தெய்வத் தமிழ்ப்பணி
அன்னவர் வாழ்க்கை அருந்துணை நல்லார்
கன்னித் தனித்தமிழ் காத்த நீலாம்பிகை
மறைமலை யருளிய மாதர் தனிநடை
காசுப் பிள்ளையின் மாசில் ஆராய்ச்சி
துாகக் காவின் துாயசித் தாந்தம்
இராக வையங்கார் இனியநுண் ணறிவு
பூரண லிங்கரின் பொங்கிய புலமை
திருவிக் காவின் தீந்தமிழ்த் தென்றல்
ஆர்க்கே சண்முகம் அரிய சிலம்பொலி
சேதுப் பிள்ளேயின் மோனை முத்தமிழ்
அண்ணா மலைமன் அமைத்த கலைப்பணி
பண்டித மணியின் தண்டமிழ் ஞானம்
நாவலர் பாரதி வீர நல்லுரை
உமா மகேசுரர் உரிய தமிழ்ப்பணி
கரந்தைக் கவியரசு உரந்தரு புலமை
நாட்டவர் போற்றிய நாட்டார் நயவுரை
ஈட்டி ராசேகவரி இனிய விஞ்ஞானம்
இரசிக மணியின் எளிய தமிழுரை
தீப்பி மீயின் தேர்ந்தநல் லறிவு
ஏசிச் செட்டியார் தேசுகொள் ளறிவு
வரத ராசரின் மதிமிகு நுட்பம்
ஒளவை துரைசாமி செவ்விய புலமை