பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்ந்த கதை

27

அப்பாத் துரையின் பன்மொழி அறிவு
செப்பும் கிராமணி சீறு முழக்கம்
தேவ நேயப்பா வாணர் மொழித்திறம்
மேவு சீர்மகிழ்நன் மென்மைத் தமிழ்நடை
இராச மாணிக்கம் வீசும் தமிழொளி
பெரியார் அரிய அரசியல் முழக்கம்
அண்ணாத் துரையின் அாிய சொற்சுவை
என்னெஸ் கேயின் இனிய நகைச்சுவை
இலக்குவ னாரின் எளிய உரைநடை
எல்லாம் தமிழை இனிது வளர்த்தன
இந்த விழாவில் கலந்துநன் கிருந்து
செந்தமிழ்ச் சுவைத்தேன் சிந்தை பருகிடும்
நீங்களும் தமிழைப் பாங்குற வளர்த்தீர்
ஓங்கி நம்தமிழும் உயர்ந்து வளர்ந்தது.

இசை வேறு

தமிழ் வாழக! தமிழ் வாழ்க! என்று பாடு
தமிழ் வெல்க! தமிழ் வெல்க! என்றுதினம் ஆடு
தமிழை அழிப்பாரைத் தலைதுணிக்க ஒடு
தமிழைப் பழிப்பாரைத் தவிடாகச் சாடு
தமிழர்கள் உலகிலே தனியரசு கண்டார்
தமிழர்கள் இனிமேலும் தனியரசு காண்பார்.

இசை வேறு

வாழியவே!புலவரெல்லாம்,வாழியவே!தமிழ்மொழியும்
வாழியவே! கழகங்கள், வாழியவே! தமிழ்நாடும்
வாழியவே! நீங்களெல்லாம் வளர்தமிழைக்கேட்டதனால்
வாழியவே! நாங்களெல்லாம் வளர்தமிழைப்பாடியதால்
வந்தவர்கள் போனவர்கள் எல்லோரும் வாழியவே !