உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201

கொள்ள புள்ளிமான் குட்டிக்குப் புலி பால் தராது என்பதை நான்மட்டுமா, இன்று பூஜைசெய்து வரம் கேட்டுக் கொண்டிருக்கும் தம்பிகளும் சேர்ந்து சொன்னார்கள். விளக்கம்போதும் என்று நாம் இருந்துவிடுவதற்கில்லையே; தெளிவு அரசோச்சும்வரையில் எடுத்துக் கூறியபடி இருந்தாகவேண்டும்.

காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம் பொருளற்றது; பயனற்றது,
காங்கிரசின் பேச்சுக்கும் நடத்தைக்கும் பொருத்தம் இல்லை.

என்பது மேலும் மேலும் விளக்கப்பட்டாக வேண்டும்.

ஏழைக்காகப் பரிந்து பேசுவது போதும், அதனையே இந்த மக்கள் சோஷியலிசம் என்று ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்.

ஏழைக்காகப் பரிந்து பேகவதும், ஏழையை வதைக்கும் செல்வவான்களுக்கு அறநெறி, அன்புவழி பற்றிக் கூறுவதும், புதிய கண்டுபிடிப்பு அல்ல, மூவர்ணச் சரக்கும் அல்ல; மிக மிகப் பழையது.

வறுமையால் தாக்குண்டு கிடப்பவர்கள், தெளிவு பெற்று, தமது நிலைமைக்கான காரணம் கண்டறிந்து, உரிமை உணர்வு பெறுகிற வரையில், தானம் தருமம், பரிவு பச்சாத்தாபம், உதவி சலுகை இவைகளைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சிகொள்வர், நன்றியும் கூறிடுவர், இது நல்ல திட்டம் என்றும் ஒப்புக்கொள்வர். ஆனால், பொருளாதார யந்திர அமைப்பின் தன்மையையும், அதனைச் சமைத்திட்ட அரசியல் அமைப்பின் போக்கையும் விளங்கிக்கொண்ட பின்னர், என்ன கூறுவர்?

இருளது விட்டு வந்துளோம் வெளியே!
அய்யோ பாவம்! எனு மொழி கேளோம்!
ஐயமளித்திடும் கரமது வேண்டோம்!

என்றன்றோ கூறுவர். உரிமை கேட்பர், உதவி அல்ல!