41
போகிறது” என்று விருந்து சாப்பிடுவோரிடம் கேட்டானாம், விரட்டி அடிக்கப்பட்டவன்; அதுபோல் இது ஒரு ரகம்—கிடக்கட்டும். இத்தகைய மந்தமதிக்காரர்களின் மண்டையிலடிப்பது போல, பெரியார் புயல் நிவாரணத்துக்கு ஓராயிரம் ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார். கெடுமதி எனும் புழு நெளியும் உள்ளத்தினருக்கு தக்கதோர் புத்திமதி புகட்டிடவே பெரியார் இந்த அன்புக் காணிக்கை தந்தார் என்பது மட்டு மல்ல, வந்துற்ற அவதி எவ்வளவு பயங்கரமானது என்பதை அனைவரும் அறியச் செய்ய வேண்டும் என்ற பெருநோக்கும் இதற்குக் காரணம் என்று கூறவேண்டும். தம்பி! நமது கழகத்தின் சார்பில் ஓராயிரம் தரப்பட்டிருப்பதுபற்றிப் பத்திரிகைகளில் பார்த்திருப்பாய். சென்னையில் நமது பொதுச் செயலாளருடன் நானும், அறிவகத்தின் தொடர்பினை அடிக்கடி கொள்ளும் கழகத் தோழர்கள் சிலரும் பேசினோம்—அவர் பட்டுக்கோட்டை தெரியுமல்லவா— கண் கலங்கிய நிலையில் இருந்தார். கடலில் கடுகு, இந்த ஆயிரம். செய்ய வேண்டியது இனி தொடர்ந்து;—இது உதவி செய்யும் சீலர்களுடன் நாமும் சேருகிறோம் என்பதை எடுத்துக் காட்டும் சிறு அறிகுறி.
தம்பி! முன்பு நாம் நாடகமாடியும் நல்லோரிடமும் கரம் நீட்டியும் நிதி திரட்டினோம்—அப்போது இக்காரியத்தில் ஈடுபட மற்றவர்கள் துடித்தெழுந்து கிளம்பாததால். இம்முறை நாட்டிலுள்ள நல்லோர் எல்லோருமே, நான், நீ என்று போட்டியிட்டுக் கொண்டு உதவி திரட்டிட முனைந்திடுகிறார்கள்— மகிழ்கிறேன்—மகிழ்வாய். நாம் அந்த முயற்சியில் நமது பங்கினைச் செலுத்த உடனே முற்பட வேண்டும்.
காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்டுகள், கழகத்தார்கள், என்று ‘அளவு கோல்’ போட்டு அளக்க வேண்டிய விஷயமல்ல இது ! வீடு, தீப்பற்றிக் கொண்டு எரியும்போது பேரம் பேசுபவன், வீணன். எனவே, துயர் துடைக்கும் எந்த முயற்சியில் யார் நம்முடைய ஒத்துழைப்பைக் கேட்டாலும் தரத் தயாராயிருக்கிறோம் — நம்மாலான உதவிகளைச் செய்யவும் சித்தமாயிருக்கிறோம். ஏனெனில், நிகழ்ந்திருக்கிற நாசம் சாதாரணமானதல்ல, அவதிப்படும் மக்கள் தொகையும் கொஞ்ச நஞ்ச மல்ல. எனவே, அதன் துயர்களையும் பொறுப்பில், அரசுக்கு வேண்டிய உதவி ஒத்தாசைகளை யாவரும் செய்ய வேண்டும்.
அதே சமயத்தில் அரசினரும், பணத்தைப் பணம் என்று பார்க்காமல் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்குப் பலியானோர் அனைவரின் வாழ்க்கையிலும் விளக்கேற்றி வைக்கும் பெருமுயற்சியிலீடுபட வேண்டும். ஆபத்துக்கு ஆளாகி அல்லற்படுபவர்கள், நமது உடன் பிறந்தோர்கள், இதில் கட்சி காரணமில்லை—கருணையுள்ளம் பேதம் கலக்கக்கொண்ட