22
அப்படி அல்ல; அவர் அந்தச் சம்பவங்களிலேயே தொடர்பு கொண்டிருந்தவர். காங்கிரசின் தலைவர்களின் கொடிவழிப்பட்டி அறிந்தவர்—யாரார் என்னென்ன யோக்யதை உள்ளவர் என்பதைத் தெரிந்தவர்—எவரெவர் எப்படி எப்படிக் காங்கிரசுக்குள் வந்து சேர்ந்தனர் என்ற ‘கதைகள்’ அவருக்குத் தெரியும்.
அவர் கூறுகிறார், இந்தக் காமராஜர், பார்ப்பனர்கள் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து சேர்த்தவாகளிலே ஒருவர் என்று.
மூன்றாந்தரம்!! என்பதைக் கூறிவிட்டு, சந்தேகமிருப்போர்,
கல்வி
பொதுஅறிவு
ஒழுக்கம்
அனுபவம்
நேர்மைதகுதி
திறமை
என்ற இவைகளைக் கவனித்துப் பார்த்து, இந்தக் காமராஜர் யார் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்—ஆண்டு ஆறுதான் உருண்டோடியுள்ளன, அந்த அரிய கருத்துரை நாட்டுக்கு அளிக்கப்பட்ட பிறகு.
பதவியும், அதிகாரிகளை மிரட்டி வளைய வைக்கும் வாய்ப்பும் இருந்தால், அகம்பாவம் ஏற்பட்டு, எப்படிப்பட்டவர்களையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் துணிவு கிளம்பும். இது காமராஜர் விஷயத்தில் முற்றிலும் உண்மையாகிவிட்டது என்பதையும், விடுதலை விளக்குகிறது.