கடிதம்: 64
சந்தனம் அரைத்த கரம்!
விருந்தும் வரவேற்பும்—திட்ட ஊழல்—ஏழை துயரம்.
தம்பி!
ஒரு ஓலைக்கொத்துக் குடிசைக்குள்ளே நடைபெற்றுக் கொண்டிருக்கும், அவலச் சுவைமிக்க சம்பவம் கூறுகிறேன், கேள். மாட மாளிகைகளிலே நடைபெறும் சம்பவமாக இருந்தால், கேட்கத் தித்திக்கும், இது...? என்று எண்ணி, அலட்சியமாக இருந்து விடாதே, பலப்பல ஆயிரம் குடிசைகள் பாடுபட்டால்தான் ஒரு மாளிகை; கவனமிருக்கட்டும்.
“கையைத் தூக்கவே முடியவில்லை. ஒரே குத்தல், குடைச்சல். நானும் எப்படி எப்படியோ சமாளித்துப் பார்க்கிறேன், முடியல்லே...பிராணனை வாட்டுது...”
“பாரடி அம்மா, உங்க அப்பன், சுளுக்குக்கு இந்தக் கூச்சல் போடறதை! கை சுளுக்கிக்கிட்டுதாம், அதுக்கு உசிரு போகுது, தாளமுடியல்லேன்னு ஒரே அமக்களம் பண்ணுற கூத்தைப் பாரு...”
“பெரிய கிராதகிடி, நீ. நான் என்ன, துடியாத் துடிக்கறேன். மூணுநாளா நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு, நோவை பொறுத்துக்கிட்டு இருந்தேன்—என்னாலேயும் வலி தாளமுடி-
அ. க. 4—2