உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

அவர்கள் சொல்லுகிறார்கள், நம்பாதவனைத் தேசத் துரோகி என்று ஏசுகிறார்கள்.

“என்ன சந்தனக் காப்பு உற்சவமோ! கைசுளுக்கு என் பிராணனை வாட்டுது இப்படி வலி எடுக்கும் அளவுக்கு நான் அரைத்தெடுத்த சந்தனந்தானய்யா அது” என்று செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அரைத்திடும் கந்தப்பன் சொன்னால், சும்மா விடுவார்களா! செந்திலாண்டவன்கூட அல்ல, அங்கு வரும் காவடி தூக்கியும், காவிகட்டியும், மொட்டையும் பிறவுமன்றோ, கந்தப்பன்மீது வசைபொழியும்!

சவுதி அரேபியாவோடு நின்று விடுவதா, நேரு பவனி.
நேருபவனி ஒரு நீண்ட தொடர்கதை...

அமெரிக்கா அழைக்கிறது, ஆஸ்திரேலியாவில் அலுவல் இருக்கிறது, எங்குதான் செல்லக்கூடாது! செல்கிறார்!!

இதற்காகச் செலவாகும் தொகையை எமக்குச் செலவிட்டால்கூடப் போதுமே, புளித்தகூழுக்கு ஒரு துண்டு காரமிளகாயாவது கிடைக்குமே! என்று கேட்பர் இந்தப் பஞ்சைகள்.

பஞ்சைகள் எப்போதும் எந்த நாட்டிலும் இப்படித்தான் கேட்பது வாடிக்கை; பவனிவரும் ஆட்சியாளர் குறுநகை புரிந்தபடி, “குறைமதியினரே! வீணாக ஏதேதோ கூறிக் கிடக்கின்றீரே! பவனியால், எமக்கா இன்பம்? நாட்டின் மதிப்பன்றோ உயருகிறது” என்று பேசுவதும் வழக்கம்!

பொறுமையின் எல்லைக்குப் பஞ்சைகள் சென்று முகட்டின் மீது நிற்பர். மேலால் செல்ல வழி இருக்காது. பிறகுதான் திரும்பிப்பார்த்திடுவர். தம்பி! அப்படித் திரும்பிப் பார்த்திடும் போதுதான், ‘பஞ்சடைந்த கண்களிலே கனல் கக்கும், புழுவும் போரிடும்’ என்ற நிலைபிறக்கும்.

அது, இப்போது, உடனடியாக நடைபெறக் கூடியதா, என்ன? எனவே, வீண் பீதிக்கு இடமளிக்காமல், நேரு பெருமகனார், சந்தனக் காப்பு உற்சவத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

தம்பி! எப்படிப்பட்ட எழில் மிக்க நாட்டிலே இருக்கிறாய் தெரியுமா என்று, எந்த ஏழையைக் கேட்டாலும், அவன் ஒரு விளக்கமற்ற பார்வையால் நம்மைத் திகைக்கவைப்பான்.

இமயப் பனிமலையின் எழிலும் கங்கை புரண்டோடும் கவர்ச்சியும், காதல் மாளிகையாம் தாஜ்மஹாலின் தகத்த-