36
கவர்னர் பதவி என்பது காந்திகோயிலில் பஜனை செய்வதற்கும் கலா பவனத்தில் காட்சி காண்பதற்கும் மட்டுமே உள்ள ‘பொழுதுபோக்கு’ என்று கருதாமல், நாட்டவருக்கு உண்மையை நடுக்கமின்றி எடுத்துரைக்கும் பெரும் பொறுப்பும் கவர்னருக்கு உண்டு என்ற தூய நோக்குடன், குமாரசாமிராஜா பேசினார்.
எங்கள் பக்கம் அணைகட்டுவதற்கு, செலவு சற்று அதிகம்தான் பிடிக்கும்—உங்கள் பகுதியில் கிடைப்பதுபோன்ற கற்கள் இங்கு கிடைப்பதில்லை, எனவே இங்கு சிறிது பணம் அதிகமாகச் செலவாகிறது என்று, திட்ட அலுவலக அதிகாரி சமாதானம் கூறுகிறார். குமாரசாமிராஜா அவர்கள் பல உண்மைகளைத் தமது ‘இரத்னச் சுருக்கமான’ பேச்சிலே வெளியிட்டிருக்கிறார்; முப்பது ஆண்டுகள் இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி இதமாக எடுத்துச் சொன்னாலும், இதுபோன்ற அஞ்சா நெஞ்சுடன் நம்ம காமராஜர் பெரிய இடத்தின் போக்கைக் கண்டித்துப் பேசும் அஞ்சாமையைப் பெறுவாரா என்பதும் சந்தேகமே!
1. இங்கு செலவாவதைவிட வடக்கே, பணம் அதிகம் செலவாகிறது.
2. செலவு செய்யப்படும் முறை, வீண் விரயத்துக்கு இடமளிக்கிறது.
3. அனாவசியமாக அதிகமான அளவு மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவை, திட்டம் அமுல் செய்யப்படுவதுபற்றி, நேரில் கண்டறிந்தவர், பொறுப்பான பதவியில் அமர்ந்திருப்பவர், கூறுவன.
வடக்கு என்பதற்காகவே, ஏதாவது வம்பும் தும்பும் பேசும் வட்டாரமல்ல.
தேர்தல் ஆசை பிடித்துக்கொண்டதால், பேசும் பேர்வழியுமல்ல!!
பணம் விரயம் ஆவதை மட்டுமல்ல, அவர் சுட்டிக்காட்டி இருப்பது.
தாமோதர் திட்டத்தில் தேவையைவிட அதிகத் தொகை செலவிடப்படுகிறது என்பது மட்டுந்தான் ராஜாவின் மனக்குறை என்றால், உயரிடத்தில் அமர்ந்துள்ள அவர், இதனை, நேருவிடம் ஜாடை மாடையாகக் கூறினாலே போதும். ஆனால்