37
‘ராஜா’—கோவைப் பொதுக்கூட்டத்தில் தொழிலதிபர்களும், துரைத்தனத்தாரும் கூடியிருந்த மன்றத்தில் எடுத்துப்பேசி இருக்கிறார்.
திட்டங்களைச் சிக்கனமாகச் செலவிட்டு முடிக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகப் பேசினதாக யாராவது கருதிக்கொண்டு, தமது பேச்சின் சூட்சமத்தை அறியாது போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தினால் உந்தப்பட்ட நிலையில், ராஜா மேலும் சில உண்மைகளை எடுத்துக்காட்டினார்.
இந்தக் ‘கேலி’க்கு ஈடாகச் சமீப காலத்தில், எந்தத் தலைவரும் வட நாட்டுப் போக்கைக் கண்டித்ததில்லை என்று கூறலாம்.
கட்டுவது காவி
தொட்டு இழுக்கிறான் பாவி!
என்று காரிகை கதறக் கேட்டால் எப்படி இருக்கும்? அதுபோல, பேசுவது சர்வோதயம், வரவழைப்பதோ அமெரிக்க நவீன யந்திரம்—என்று குட்டுகிறார் ராஜா!!
சர்வோதயம்—ஒரு இலட்சியம், உத்தமரொருவர் ஊருக்கும் உலகுக்கும் காட்டும் பாதை! இதற்கு உதட்டுபசாரம் அளித்துவிட்டு, தமது தேவைக்கு, வசதிக்கு, அமெரிக்காவிலிருந்து நவீன யந்திரங்களை வரவழைத்துப் பயன் பெறுகிறார்கள் வடக்கே!
சர்வோதயம் பேசப்படுகிறது—செயலோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
இந்தக் கபடத்தைக் காட்டமட்டும் ராஜா இதைக் கூறினதாக நான் எண்ணவில்லை, தம்பி, இதற்கு உள்ளே மிகப்பெரிய உண்மை உறங்கிக்கொண்டிருக்கக் காண்கிறேன்.
ஓ! என் நாட்டவரே! உரத்த குரலில், சர்வோதயம் பற்றிய உபதேசம் நடக்கிறது; வடக்கே இருக்கும் தலைவர்களெல்லாம், அந்த இலட்சியத்தை வாழ்த்திப் பேசுவது கேட்டு, மயங்கிவிடாதீர்கள்! சர்வோதயம் பேசும் அந்த வடக்கத்தித் தலைவர்கள், இனிக்க இனிக்க, நெஞ்சு