59
“அப்படிச் சொல்லிவிடுவதற்கில்லை...”
“ஏன்?...என்ன...!”
“முன்னேற்றக் கழகத்தார் கூட்டம் போட்டால்...!”
“முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியா?... அடுக்கு மொழி பேசிடும் ஆள் மயக்கிக் கூட்டம், அதுகளுக்கு அரசியல் என்ன தெரியும்...?”
“அதுசரி, அதுசரி......ஆனால் இந்த ஜனங்கள்...”
“குப்பையில் தள்ளுங்கள்......பெரிய கூட்டமா அவர்கள் வந்தபோது?”
“ஆமாம்......பிரமாண்டம்......அதைப் பார்த்த பிறகுதான் நம்ம பேச்சிமுத்து, தேர்தலில் இறங்கவே தயங்குகிறார்.”
“அப்படியா! இன்று வெளுத்து வாங்கிவிடுகிறேன், முன்னேற்றக் கழகத்தை...”
இப்படி உரையாடல் நடந்தான பிறகு, பொதுக்கூட்டம் சென்றிடவும், ‘பிரமுகர்கள்’ அவரை வரவேற்கவும், பொதுமக்கள் ஆர்வம் காட்டாமலிருக்கவும் கண்டவுடன், நிதி அமைச்சருக்குக் கோபம் கோபமாக வருகிறது, கொக்கரிக்கிறார்.
இந்தக் கிழமை, தம்பி, சென்ற இடமெல்லாம், எங்கே அந்த அண்ணாத்துரை? பிடித்திழுத்து வாருங்கள்!—என்று கேட்பது போலவே, சீற்றத்துடன் பேசியிருக்கிறார். நான் வருத்தமடைகிறேன், மெத்தவும் அவருக்கு ‘வேலை’ கொடுத்துவிட்டதற்காக.
திட்டம் எங்கே? திட்டம் எங்கே? காட்டட்டும்! நீட்டட்டும்! பார்க்கிறேன்! நிபுணர்களை, அழைக்கிறேன்! அவர்கள் அளித்திடும் தீர்ப்பை ஏற்கிறேன்! என் பதவியைக் கூடத் துறக்கிறேன்!—என்று ஒரே வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.
தேர்தல் நேரமல்லவா — தீ பறக்க வேண்டுமே — அப்போதுதானே ஐம்பது ஆயிரமானாலும் இலட்சமானாலும் பரவாயில்லை என்று வீசி எறிந்து தேர்தல் வேட்டையில் ஈடுபட ‘ஆட்கள்’ தைரியம் பெறமுடியும். அதற்காகப் பாபம், அமைச்சர் ஆலாய்ப் பறக்கிறார், ‘ஆலகாலம்’ கக்கப்பார்க்கிறார். அவர் உதிர்த்துள்ள ‘முத்துகளை’ சிந்தாமல் சிதறாமலெடுத்து ஏடுகள் வெளியிட்டுத் தமது தேசியத்தைத் தெரி-