பக்கம்:தம்பியின் திறமை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள் எலியும் முயலும்

ஒரு முள்ளெலி தினந்தோறும் அதிகாலையில் இரைதேடு வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தது. அது செல்லுகின்ற வழியிலே இருந்த புல்லை மேய்வதற்காக ஒரு முயல் அந்த நேரத்தில் அங்கு வருவதுண்டு. வளைந்து குட்டையாக இருக்கும் முள்ளெலியின் கால்களைப் பார்த்ததும் முயலுக்குச் சிரிப்பு வரும். முள்ளெலி குடுகுடுவென்று மெது வாக ஓடுவதைக் கண்டும் அதற்குச் சிரிப்பு வரும். அதன் உடம்பெல்லாம் முள்ளாக இருப்பதை நோக்கியும் முயல் நகைக்கும்.

'முள்ளெலியாரே, எங்கே இவ்வளவு வேகமாகப் புறப்பட் என்று இப்படி முயல் கிண்டலாகத் தினமும் கேட்ப துண்டு. முயல் தன்னைக் கேலி செய்வதை முள்ளெலி தெரிந்து கொள்ளாமல் இருக்கவில்லை. ஆனல் அது பொறுமையோடு ஏதாவது பதில் சொல்லும். அப்படிச் சொல் லும் பதிலைக் கேட்டு மேலும் கேலியாக முயல் பேசத் தொடங்கும்.

டீர்கள்?'