பக்கம்:தம்பியின் திறமை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


குறிப்பிட்ட நேரத்திற்கெல்லாம் ஆண் முள்ளெலி முய லிடம் வந்து சேர்ந்தது. உடனே இரண்டும் ஒட்டப் பந்தயத் திற்குத் தயாராயின. முயல் ஒரே பாய்ச்சலாகத் தாவிக் குதித்து வெகுவேகமாக ஒடி மறைந்துவிட்டது. முள்ளெலி ஒடுவதைப் போலக் கொஞ்ச தூரம் பாசாங்கு செய்துவிட்டு, முயல் கண் ணுக்கு மறைந்ததும், புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவந்து திம்மதியாகப் படுத்துக்கொண்டது.

முயல் நாலுகால் பாய்ச்சலிலே தாவித்தாவிச் சென்று குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. 'அந்த முள்ளெலி இன் னும் நூறில் ஒரு பங்கு தூரம்கூட வந்திருக்க முடியாது” என்று பெருமையோடு எண்ணிக் கொண்டு அது முன்னுல் பார்த்தது.

“என்ன முயலாரே, இவ்வளவு நேரமா உமக்கு? பாவம் உம்மால் என்னுடன் ஓடிவர முடியுமா?" என்று கூறும் முள் ளெலியின் குரல் கேட்டது. அதைக் கேட்டதும் முயல் அப் படியே திகைத்துப்போய் நின்றுவிட்டது. அதற்கு ஒன்றுமே புரியவில்லை. முள்ளெலியாரே, ஒரு தடவை ஜெயித்தால் அது உண்மையான வெற்றியாகாது. இங்கிருந்து மறுபடியும் நாம் புறப்பட்ட இடத்திற்கே ஒடலாம். இந்தத் தடவை யாருக்கு வெற்றி கிடைக்குமென்று பார்ப்போம்" என்று தலை குனிந்து கொண்டே சொல்லிற்று.

"ஓ, நான் தயார். புறப்படுங்கள்' என்றது முள்ளெலி,

முயல் மீண்டும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தோடிற்று. ഖങ്ങ முள்ளெலி அங்கேயே நின்று கொண்டது. முதலில் புறப்பட்ட இடத்தை முயல் அணுகியதும் அங்கிருந்த ஆண் முள்ளெலி, "என்ன முயலாரே, பாவம் உங்களால் ஒட முடிய வில்லை' என்று பரிகாசமாகச் சொல்லிற்று.

முயல் மறுபடியும் மேலும் ஒரு முறை ஒடலாம் என்றது. முள்ளெலியும் உடனே சம்மதித்தது. இப்படிப் பல முறை முயல் ஓடிஓடிப் பார்த்து மூச்சுத் திணறிக் களைத்துப் போய் விட்டது. வெற்றி மட்டும் அதற்குக் கிடைக்கவில்லை. கடைசி