பக்கம்:தம்பியின் திறமை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഡെസ്റ്റ് ക്ലെജ്

முன்னுெருகாலத்தில் நாகபுரி என்று ஒரு பட்டணம் இருந் தது. அந்தப் பட்டணத்தை ஆண்ட அரசனுக்கு நீண்டகால மாகப் பிள்ளையில்லாமலிருந்து கடைசியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் தாயாராகிய அரசி அதைச் செல்வமாக வளர்த்து வந்தாள். அதே சமயத்தில் பொய்யே பேசக்கூடாது என்று குழந்தைக்குப் போதித்து வந்தாள். "உயிர் போவதாக இருந்தாலும் பொய் பேசக்கூடாது' என்று அவள் சொல்லுவாள். பல கதைகள் சொல்லியும் அந்த எண்ணத்தை நன்ருக மனதில் பதியச் செய்வாள். தாயின் அன்பை நன்ருக அறிந்திருந்த அந்தக் குழந்தை அவள் சொன்னபடியே நடக்கப் பழகிக் கொண்டிருந்தது. அதற்கு லோகநாதன் என்று பெயர்.

லோகநாதனுக்கு எட்டு வயதாக இருக்கும்போது திடீ ரென்று ஒரு நாள் இரவில் ஒரு பக்காத்திருடன் அரண்மனைக் குள்ளே எப்படியோ தந்திரமாகப் புகுந்து யாருமறியாமல் அவனைத் தூக்கிக்கொண்டு போய் விட்டான்.

நாகபுரிக்கு மேற்குப் பக்கத்திலே ஒரு பெரிய மலை இருந் தது. அதில் அநேக குகைகள் உண்டு. அந்தக் குகைகளைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரங்களும் புதர் களும் இருக்கும். அவற்றின் வழியாக யாருமே வரப் பயப்படு வார்கள்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் அந்தப் பக்காத்திருடன் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்தான். அவன் திடீரென்று ஏதாவது ஒரு ஊருக்குள் நுழைந்து கொள்ளையடித்துக் கொண்டு போய்விடுவான். அவன் எங்கிருந்து வருகிருன், எப்பொழுது வருகிருன் என்று யாருக்குமே தெரியாது.