பக்கம்:தம்பியின் திறமை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லக் கூடாது' என்று அந்தத் திருடன் தன் மகனுக்குப் போதித்து வந்தான்.

தன் மகன் பொய்யே பேசுகிருளு என்று அறிந்து கொள் வதற்காகப் பக்காத்திருடன் பலவிதமான சோதனைகள் எல்லாம் செய்வான். சோதனையில் ஒரு தடவை தப்பினாலும் மகனை

நன்ருக உதைப்பான்.

ஒரு நாள் காலையில் செல்லமுத்துவும் பக்காத்திருடனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டு முடிந்த வுடன் பக்காத்திருடன் தன் மகனைப் பார்த்து, காலை உணவு சாப்பிட்டாயிற்ரு?" என்று கேட்டான். "ஆயிற்று' என்று செல்லமுத்து பதில் சொன்ஞன்.

உடனே பக்காத்திருடன் அவன் கன்னத்திலே ஓங்கி ஓர் அறை கொடுத்தான். ஏண்டா, சாப்பிட்டாயிற்று என்று எதற்காக உண்மையைச் சொன்னுய்?' என்று அவன் கோபத் தோடு கேட்டான்.

'இரண்டு பேருமாகத்தானே இப்பொழுது சாப்பிட் டோம்?' என்ருன் செல்லமுத்து.

"அப்படியிருந்தாலும் நீ உண்மையைச் சொல்லியிருக்கக் கூடாது. அதோடு இன்னொரு விஷயத்தையும் நீ தெரிந்து கொள்ளவேண்டும். நீ யாரையும் நம்பக்கூடாது. நம்பினல் ஏமாந்து போய் அகப்பட்டுக் கொள்வாய்' என்று அவன் போதனை செய்தான். இப்படிப் போதனை செய்தே திருடன் தன் மகனை வளர்த்துவந்தான்.

இந்தச் செல்லமுத்துவுடன் அரச குமாரனுன லோகநாதன் மலைக் குகையிலே வாழ வேண்டி நேர்ந்தது.

பக்காத்திருடனைக் கண்டு பிடிப்பதற்காக நாகபுரி அரசன் முயற்சி செய்தானல்லவா? அரசனுல் தன்னைக் கண்டுபிடிக்க முடியாது என்று காண்பிப்பதற்காகவே பக்கத்திருடன் அந்த

த. தி.-2